Kasi and Rameshwaram காசியும்-இராமேஸ்வரமும் :
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ॐ மானிட பிறப்பெடுத்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது அவசியம் செல்லக்கூடிய தலங்களில் 1. காசி , 2. இராமேஸ்வரம் மிக முக்கியமானதாகும்.

ॐ முதலில் காசிக்கு சென்று வந்தால் அவசியம் இராமேஸ்வரமும் , அல்லது முதலில் இராமேஸ்வரம் சென்று வந்தால் கூடவே காசிக்கும் போக வேண்டும் என்பார்கள்.
இராமேஸ்வரம் ↔ காசி சென்றால் தான் இந்துக்களின் புனித பயணம் முழுமை பெறும் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கை.

 

ॐ காசிக்கு வயதானதவர்கள் செல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் செல்லலாம்.

ॐ காசிக்கு சென்றால் அவசியம் ## திருவேணி சங்கமம் அதாவது முக்கூடல் 1.கங்கை 2.யமுனை
3.சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்றாக சேரும் இடத்திற்கு செல்ல வேண்டும் ## . அங்கு செல்வதற்கு படகுகள் இயக்கப்படுகின்றன். அவ்விடத்தில் சிறிது நீரை எடுத்து கொண்டு வந்து இல்லங்களில் வைத்து கொள்ளலாம்.

ॐ இராமேஸ்வரம் சென்றால் அவசியம் அங்குள்ள அலை வராத புனித கடலாம் அக்னி தீர்த்ததில் நீராடி பின் கோவினுள் உள்ள அனைத்து தீர்த்த கிணற்றில் உள்ள நீரில் நீராட வேண்டும். அங்கேய நீர் இரைத்து ஊற்றுபவர் இருப்பார்.

 

ॐ காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் மிக முக்கியமான ஒரு ஒற்றுமை உள்ளது. என்னவென்றால் ,

👉 இராவணனை கொன்றதால் பிரம்மஹஸ்தி தோஷம் இராமனை பிடித்து கொண்டது .

👉 இதிலிருந்து விடுபட இராமன் இராமேஸ்வரத்தில் சீதையால் மணலால் செய்யபட்ட லிங்கத்திற்கு

🌻 #ஓம்_சிவாய_நமஹ

🌻 #ஓம்_சிவ_லிங்காய_நமஹ

🌻 #ஓம்_ஆத்மாய_நமஹ

🌻 #ஓம்_ஆத்ம__லிங்காய_நமஹ

🌻 #ஓம்_சர்வாய_நமஹ

🌻 #ஓம்_சர்வ_லிங்காய_நமஹ

🌻 #ஓம்_பவாய_நமஹ

🌻 #ஓம்_பவ_லிங்காய_நமஹ

என்றெல்லாம் கூறி சிவபெருமானையே நினைத்து பூஜித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டார்.

👉 இதே போல் காசியிலுள்ள விஸ்வநாதர் நாமங்களிலேயே உயர்ந்த நாமமான “இராம நாமத்தையே” நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

👉 அதாவது காசியில் சிவன் இராமனையும், இராமேஸ்வரத்தில் இராமன் சிவனையும் பூஜிக்கின்றனர்.

#ஹரி_ஹராய_நமஹ.

2 Comments

Leave a Comment