பங்குனி உத்திரம் நாள் : பங்குனி ( 16 ) | 30.3.2018 வெள்ளிக்கிழமை | Panguni uthiram

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

Panguni uthiram

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :

திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

ராமபிரான் – சீதாதேவி, பரதன் – மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்னன் – ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்.

ஓம் நமசிவாய போற்றி

*பங்குனி உத்திரம்*
30.03.2018
வெள்ளிக்கிழமை காலை 6.49 மணிக்கு பங்குனி உத்திரம் நட்சத்திர நேரம் தொடங்குகிறது. சனிக்கிழமை காலை 6.16 மணி வரை உத்திர நட்சத்திர நேரம் உள்ளது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆலயங்களில் தெய்வங்களின் திருக்கல்யாணம் நடைபெறும்.

30.03.2018 வெள்ளிக்கிழமை
இரவு 7.17 மணிக்கு பௌர்ணமி தொடங்குகிறது. பௌர்ணமி சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு முடிகிறது.எனவே இரவு பெரும்பாலான ஆலயங்களில் தெய்வங்களின் திருமணம் நடைபெறும்…

இத்தகைய சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர திருநாளில் அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பெரும் பலன்களை பெற்று ஆனந்தமாய் இருங்கள்….

தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற *பங்குனி உத்திரம் சாஸ்தா* வழிபாடு 30.3.2018 நாளை நடைபெறுகிறது.
தென்மாவட்ட மக்கள் தங்கள் பூர்வீக குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபட்டு குலதெய்வ அருளை பெறவும்.

அனைவருக்கும் இனிய பங்குனி உத்திர திருநாள் நல் வாழ்த்துகள்..

நன்றி வணக்கம்… ஓம் நமஹ சிவாய…

 

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!