சங்கடஹரசதுர்த்தி அபிஷேகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Sangatahara chaturthi..

வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
ஒளவையார்

ஒவ்வொரு தேய்பிறைசதுர்த்தி அன்று மாலையில் விநாயகருக்கு அபிஷேகம் பலவகையில் செய்வதால் பல வகையிலும் நம் சங்கடங்கள் தீரும்.

Lord ganesha
நம் சங்கடங்களை தீர்ப்பதால்தான்
சங்கடஹரசதுர்த்தி என்கிறோம் .
நல்லெண்ணெய் காப்பு போடுவதால்
நமது துன்பங்கள் தீரும்.முதலில் பச்சரிசி  மாவு அபிஷேகம் செய்வதால் நாம் கடனாளி ஆகமாட்டோம். வராக்கடன் வசூல் ஆகும்.இளநீர் அபிஷேகம் நம் மனதை அமைதிப்படுத்தும் .பால் அபிஷேகம் தூய்மையையும் தயிர்
அபிஷேகம் சாந்தத்தையும் தரும்.
கரும்புப்பால் இழந்த செல்வத்தையும்
பழச்சாறு அபிஷேகம் 16 வகை ஐஸ்வர்யங்களையும் தரும்அதேபோல
பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் திருமஞ்சனம் மஞ்சள் பன்னீர் விபூதி
அபிஷேகம் செய்து பூர்ண அலங்காரம் செய்து அருகம்புல் மாலை வெள்ளெருக்கு மாலை அணிவித்து ஆராதனை செய்யலாம் .தனியாகவோ மற்றவர்களுடன் இனைந்து கூட்டாகவும் செய்யலாம்.எந்தகோவிலிலும் தெருவில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலும் சதுர்த்தி அபிஷேகம் செய்யலாம்  குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் நேரிடையாக அபிஷேக பொருள்
நேரிடையாக சிரம்ம் எடுத்து வாங்குவது பூஜையில் கலந்து கொள்வது நல்லது.

Lord Ganesha

கோசாரகேது மகரத்தில் இருக்கும்
நிலையில் ரிஷபம்,கன்னி,மகரம்
ராசியினர் பிரதிமாதம் கட்டாயம் சங்கடஹரசதுர்த்தி பூஜையில் கலந்து
கொள்வது கஷ்டங்களை குறைக்கும்
எதிர்பாராத துன்பங்கள் பிரச்சனைகள் உடல்நலக்கேடு பணவிரயங்களில் இருந்து பாதுகாப்பு தரும் விநாயகரை வணங்கி பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிவாரணம் பெறுவீர்

பிரியமாக என் மனதில் இருக்கும் பிள்ளையாரே
பிரேமையொடு நான் அழைக்கிறேன் பிள்ளையாரே
பின்னமின்றி முழுமையாக முடிக்க அருளும் பிள்ளையாரே
பின்னே வரும் பக்தர்களை காக்கும் பிள்ளையாரே
பிசகு செய்தால் மன்னித்து அருளும் பிள்ளையாரே
பிடித்த பக்தனாக உனக்கு இருக்கிறேன் பிள்ளையாரே
பிரிக்க முடியாது எனை உன்னிடமிருந்து பிள்ளையாரே
பிடித்தேன் உன் பத்மபாதங்களை இறுக்கமாக பிள்ளையாரே
பிடிவாதம் செய்யாமல் உன்பாதம் அருள்வாய் பிள்ளையாரே
பிள்ளையாரே நீ நினைத்ததை கொடுப்பவன் முடிப்பவன்

வாழ்க்கை வாழ்வதற்கே அதை அனுபவித்து வாழ்வோமாக நண்பர்களே…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!