லிங்காஷ்டகம் தமிழ் பதிகம் | Lingashtagam Tamil song lyrics and video.. லிங்காஷ்டகத்தின் பாடல் வரிகள் மற்றும் இந்த பாடலின் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

ஸ்ரீ லிங்காஷ்டகத்தை மனதில் சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் ஜெபித்து சிவதரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே கிடைக்கும்

தமிழ் லிங்காஷ்டகம் பாடல் வரிகள்

ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்

சிறிதும் களங்கம் இல்லா  சிவலிங்கம்

பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

Linga pooja

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்

காமனை எறித்த கருணாகர  லிங்கம்

இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்

வளர் அறிவாகிய காரண லிங்கம்

சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்

தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்

தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

Shiva lingam

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்

பங்கஜ மாலையை சூடிய லிங்கம்

தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்

தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம்

சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்

எல்லாமாகிய காரண லிங்கம்

எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

தேவரின் உருவில் பூஜைக்கும்  லிங்கம்

தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்

பரமநாதனாய் பரவிடும்  லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

லிங்காஷ்டகம் இதனை தினமும் சிவ சன்னதியில் சொல்வார்

சிவலோக காட்சியுடன் சிவனருளும் கொள்வார்….

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….

ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம்,  நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.

☘#லிங்காஷ்டகம்🍀

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும்

உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த #லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.
இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

☘பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் – நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் – குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்.
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் – பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

☘தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் – தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
காம தஹன கருணாகர லிங்கம் – மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்.
ராவண தர்ப வினாக்ஷன லிங்கம் – இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

☘ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் – எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்.
புத்தி விவர்த்தன காரண லிங்கம் – உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்.
சித்த சுராசுர வந்தித லிங்கம் – சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

☘கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

கனக மஹாமணி பூஷித லிங்கம் – பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்.
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் – நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்.
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் – தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

☘குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

குங்கும சந்தன லேபித லிங்கம் – குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்.
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் – தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்.
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் – பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

☘தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் – தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்.
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் – உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்.
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் – கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

☘அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் – எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம்.
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் – எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்.
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் – எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

☘ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் – தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் – தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
பராத்பரம் பரமாத்மக லிங்கம் – பெரியதிலும் பெரியதான,
பரமாத்ம உருவான லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

லிங்காஷ்டகம் இதம் புண்யம் – இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது.
யே படேத் சிவ சன்னிதௌ – இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்,
சிவலோகம் அவாப்நோதி – சிவலோகம் கிடைக்கும்.
சிவேந ஸஹமோததே – சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

☘#நன்றி : #தினமலர்.☘

☘#தொகுப்பு ; #திருமதி_லதா_வெங்கடேஸ்வரன்.☘

—-ஓம் ——

Lingashtakam By S.P. Balasubrahmaniam [Full Song]

Comments

comments

1 Comment

Leave a Comment

error: Content is protected !!