மீன் உருவத்தில் மச்சமுனி சித்தர் அருள் செய்யும் திருப்பரங்குன்றம் மலை | Machamuni Siddhar

மச்சமுனி சித்தர் பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்தார்.

இவர் காக புசுண்டரின் சீடராவார். மச்சமுனி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர். மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன் இருந்தது. அந்த மீன், கொடுத்து வைத்த மீன். அது கருவில் திருகொண்ட மீன்.

உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது!
மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 62 நாள் ஆகும்.

மச்சமுனி சித்தர் விசாலாட்சி சமேதராக மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் காசிவிஸ்வநாதரிடம் தன் ஆன்மாவையும், தன் உடலை முருகன் உருவாக்கிய கங்கை தீர்த்தத்தில் மீனாகவும் ஜீவசமாதி அடைந்துள்ளார். மச்சமுனி ஐயாவை காண பக்தர்கள், தயிர் வாங்கி சுனை நீரில் விடும்பொழுது ஐயா மீன் வடிவத்தில் வந்து தயிரை உண்டு நம் பாவங்களை களைவர் என்பது நம்பிக்கை…

சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து
சத்தான திரேகமதை நம்பாமல் தான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்து
நிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்
பக்தியுடன் னம்பாளின் தரிசனாத்தால்
பாருலகை மறந்ததொரு சித்தனாமே”

– அகத்தியர் 12000 –

பின்வரும் ராசிக்காரர்கள் ஸ்ரீமச்சமுனி சித்தரை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும்

கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்)
ரோகிணி (ரிஷபம்)
உத்திரம் 1 (சிம்மம்)
உத்திரட்டாதி (மீனம்)

மச்சமுனி மந்திரம்🔥

ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

நவபாஷாணம் மற்றும் போகர் வரலாறு

போகர் சித்தர் பற்றி நாம் அறியாத விஷயங்கள்

சித்தர்களின் மூல மந்திரம்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு எந்த சித்தர்களை வழிபாடு செய்ய வேண்டும்?

சித்தர்கள் ஜீவ சமாதி இருப்பிடம்

Leave a Comment