கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kumba rasi guru peyarchi palangal 2019-20

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

கும்ப ராசி பலன்கள் – 68/100.

கும்ப ராசிக்கு குருபகவான் 2, 11-க்குடையவராக வருவார்.

குருபகவான் தற்போது லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நல்ல தாராள பணப்புழக்கம் இருக்கும்.

பத்தில் தொழில் ஸ்தானத்தில் குரு இருக்கும்போது பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் கண்டிப்பாக இருந்திருக்கும்.தொழில் மந்தம் ஏற்பட்டிருக்கும்.

தற்போது லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்வது மிக நல்ல அமைப்பு.

பண வரவிற்கு குறைவிருக்காது. பணம் பல வழிகளிலும் வரும்.

அடுத்த சில மாதங்களில் கும்ப ராசிக்கு ஏழரை சனி தொடங்கியிருப்பதால் சுப செலவுகளை தாராளமாக செய்து கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் பணம் தாராளமாக வருவதால் புதிய முதலீடுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். அதை சேமித்து வைப்பது நல்லது.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குரு 11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று 3, 5, 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

பூர்வீக சொத்துக்கள் கிடைக்கப்பெறும். நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் அமையும் அல்லது அமையப்பெறும்.

தொழிலில் இதுநாள் வரை இருந்த சுணக்கமான சூழ்நிலை மாறும்.

புதிய வாடிக்கையாளர்களின் மூலம் தொழில் நல்ல லாபம் தரும்.

பங்குசந்தை முதலீடுகளை சுத்தமாக தவிர்க்கவும்.

சிலருக்கு வெளியூர், வெளிமாநிலம் செல்லக் கூடிய அமைப்பு உண்டாகும்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் கூடும்.

லாப ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்று பணவரவு அதிகமாக இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை தாரளமாக வாங்க முடியும்.

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணவிஷயத்தில் எச்சரிக்கை தேவை. 1 .6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழரைச் சனியுடன் தொடர போவதால் இன்னும் சில காலங்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருப்பது நல்லது.

அறிவுரை
சதா சஞ்சரிக்கும் கிரகங்கள் ஏதோ ஓர் காலகட்டத்தில்தான்
சுப பலன்களை அளிக்கும் வகையில் நிலை கொள்கின்றன.
அத்தகைய தருணங்களில் கிரகங்கள் கொடுப்பதை நாம்
காப்பாற்றிக் கொள்ளவேண்டும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நவக்கிரகங்கள் பரம கருணையுடன் கொடுப்பதை நாம் விரயம்
செய்துவிடக்கூடாது. மேலும், தினமும் நவக்கிரகங்களை நன்றியுடன்
பூஜித்து வர வேண்டும்.

பரிகாரம்

கும்பராசியினருக்கு பரிகாரம் என்று எதுவும் செய்யவேண்டிய அவசியம், ஜோதிடக் கலையின் விதிகளின்படி, தற்போது அவசியமில்லை இருப்பினும், சில பரிகாரங்கள் செய்தால், நவகிரகங்களினால் ஏற்படும் நன்மைகள் பல மடங்கு அதிகரிக்கும் என “அர்த்த சாஸ்திரம்” கூறுகிறது.
1. திருவரங்கம், திருவெள்ளறை, உப்பிலியப்பன் கோவில், குணசீலம் தரிசனம் நன்மைகளை பலமடங்கு அதிகரிக்கச் செய்யும்.
2. கங்கா ஸ்நானம் சிறந்த பலனளிக்கும். மகான்களின் பிருந்தாவன தரிசனம் ஈடு, இணையற்ற பரிகாரம் ஆகும்.

திட்டையிலுள்ள குருபகவானை சென்று வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்ரீ முஷ்ணம் சென்று லட்சுமி வராஹ பெருமானை வழிபட பெரிய மற்றம் நிகழும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi

1 Comment

Leave a Comment