Rahu ketu peyarchi 2017 in tamil

இராகு கேது பெயர்ச்சி 2017

ராசி_பரிகாரங்கள்

இராகு கேது பெயர்ச்சி வரும் வியாழக்கிழமை 27/7/2017 அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நட்சத்திரம், சித்த யோகம் கொண்ட நாளில் துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும்,

கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்கின்றார்.

இந்த மாற்ற நிலை 27/7/2017 முதல் 13/02/2019 வரை இருக்கும்…

Raasigalஇந்த பெயர்ச்சியின் போது எந்த இராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்ப்போம்.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

#மேஷம் :

மேஷம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

மேஷ இராசிக்காரர்கள் ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யலாம்,

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காளி வழிபாடு செய்யலாம்.

சனிக்கிழமையன்று அனுமனுக்கு தீபம் ஏற்றி வழிபட மன நிம்மதி கூடும்.

#ரிஷபம் :

ரிஷபம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்  (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

செவ்வாய் அன்று கேது பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுதல் நலம் மற்றும்

விநாயகருக்கு அருகம்புல் சாத்துவதால் பிரச்சனைகள் குறையும்.

#மிதுனம் :

மிதுனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

மிதுன இராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் நவகிரங்களுக்கு அர்ச்சனை செய்யலாம்.

பவுர்ணமி அன்று அம்மன் சந்நதியில் வழிபடலாம்,

வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வர நற்பலன்கள் கிடைக்கும்.

#கடகம் :

கடகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

கடக இராசிக்காரர்கள் ஞாயிறு அன்று இராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்.

சனிக்கிழமைகளில் ராமபிரானை வழிபாடு செய்தால் சிறப்பு.

வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வர பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

#சிம்மம் :

சிம்மம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

சிம்ம இராசிக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனுக்கு தீபம் ஏற்றலாம்.

சனிக்கிழமைகளில் துளசி அர்ச்சனை செய்யலாம் மற்றும் சூரிய வழிபாடு செய்தல் நலம்.

#கன்னி :

கன்னி: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

கன்னி இராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யலாம்.

பிரதோஷத்தன்று நந்தியை வணங்கி நற்பலன்களை பெறலாம்.

வெள்ளியன்று ராகு காலத்தில் துர்கை வழிபாடு சிறந்தது.

#துலாம் :

துலாம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

துலாம் இராசிக்காரர்கள் நவகிரங்களில் ஒன்றான ராகு கேதுக்கு அர்ச்சனை செய்தல் நலம்.

சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் வழிபாடு செய்தல் நலம்.

வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்யலாம்.

#விருச்சிகம் :

விருச்சிகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

விருச்சிக இராசிக்காரர்கள் சனிக்கிழமையன்று அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றலாம்.

பவுர்ணமி அன்று சிவன் கோவில்களில் கிரிவலம் வரலாம்.

செவ்வாய்கிழமைகளில் முருகன் வழிபாடு செய்தால் சிறப்புடன் வாழலாம்.

#தனுசு :

தனுசு: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

தனுர் இராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று நாக வழிபாடு செய்யலாம்.

சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

பிரதோஷத்தன்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வர வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

#மகரம் :

மகரம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

மகர இராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யலாம்.

தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வர சங்கடங்கள் அகலும்.

#கும்பம் :

கும்பம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

கும்ப இராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமையில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ஞாயிறு அன்று இராகு காலத்தில் காளி வழிபாடு செய்தல் சிறப்பு.

வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.

#மீனம் :

மீனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

மீன இராசிக்காரர்கள் சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை செய்தல் சிறப்பு.

வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனை வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்…..

Leave a Comment