கடகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Kadagam Rasi palan 2019

 

பிறரின் மனநிலையை சரியாக கணிக்கும் கடக ராசிகாரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நற்பலன்களை அதிகம் தரக்கூடியதாக இருக்கும். வருடத்தின் முற்பகுதி அலைச்சலையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களைத் தருவதாக அமையும்.  வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து அதிகரிக்கும். ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். திருமணம் நடக்காமல் ஏங்கியவர்களுக்கு மனதிற்கேற்ற வாழ்க்கை துணி அமைய பெறுவார்கள்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். பிப்ரவரி 13-ம் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். புதிய வீடு, செல்வாக்கும், வாகனங்களை வாங்குவீர்கள். நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும். மாணவர்களே, நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பணியிடங்களில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும், விசுவாசமும் கிடைக்கும்.  பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்கள் சற்று முரண்டு பிடிப்பார்கள். லாபத்தைக் குறைத்து விற்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். கமிஷன், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். விவசாய துறையில் விளைபொருட்களுக்கு கேட்ட விலை கிடைக்கும். கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள். பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம் இளநகர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு உமையாம்பிகை சமேத அருள்மிகு உடையீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட்ட பிரச்னைகள் அகலும்.

இந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் / வீட்டு பரிகாரங்கள்

உணர்ச்சிகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு மணி நேரமும் உங்களை நேர்மறையாக மீட்டமைக்கவும்.

முன்னோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசி பெறவும்

சோம்பேறித்தனத்தை கைவிடவும்.எந்தச் செயலையும் ஒத்தி வைக்க வேண்டாம்.

உண்மையாகப் பேசவும்

தான தர்மங்கள் செய்யவும்

ஓம் ராகுவே நமஹ அல்லது ஓம்நிதிபயாநமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

சாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Comment