கன்னி ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Kanni Rasi palan 2019

அனைவரிடமும் இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டில் சில காலம் வரை எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே மிக நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். இந்த வருடம் மனநிம்மதியையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தையும் தருவதாக அமையும். திருமணம், புது வீடு போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.

வருடம் முழுவதும் சனி சாதகமாக இல்லாத காரணத்தால் மனத்தாங்கல் காரணமாக தாயாரைப் பிரிய நேரிடும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டில் களவு போக வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளால் மன அமைதி பாதிக்கப்படக்கூடும். சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் ஆனால் உறவினர்களிடையே சுமூக உறவு இருக்காது. தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு வியாபாரிகளுக்கு செல்ல கூடிய நிலை வேறு கூட்டாளிகளின் ஆலோசனையை கேட்பது சிறந்தது. அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடக்கும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரிப்பீர்கள்.

பங்குதாரர்கள் வழக்கம்போல் முணுமுணுப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வேலையாள் களால் நிம்மதி கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி – இறக்குமதி, கன்ஸ்ட்ரக்‌ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.பெரிய வியாபாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.

உங்களுக்கான பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயல்வார்கள் என்ற போதிலும், உங்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை வந்து கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். விவசாய தொழில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். அவசரப்பட்டு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

உத்தியோகஸ்தர்களே, கூடுதல் நேரம் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. ஆனால், அலுவலகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உரிய சலுகைகளைப் பெற்றுத் தருவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும்.  கலைத்தொழிலில் இருப்பவர்கள் தங்களின் சக தொழிலாளர்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்படும்.

 

பரிகாரம் : கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று தரிசித்து வந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

தினமும் நல்லதையே நினையுங்கள்

ஆன்மீக குருவின் ஆசி பெற்றிடுங்கள்

உடல் ஊனமுற்றோருக்கு உதவும் காரியங்களில் பங்கு பெறுங்கள்

சிறந்த அணுகுமுறையைக் கையாளுங்கள்

மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையுடன் இருங்கள்

ஓம் சநேஸ்வராய நமஹ அல்லது ஓம் வஜ்ர தேஹாய நமஹ

என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல் மே மற்றும் நவம்பர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Comment