கும்பம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Kumbam Rasi palan 2019

திடமான மன உறுதி கொண்ட கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டின் தொடக்க மாதங்களில் சிறிது சங்கடங்கள் இருந்தாலும் பின்வரும் காலங்களில் அனைத்தும் நன்மையாக முடியும். இந்தப் புத்தாண்டு அனுபவத்தாலும் சமயோசித அறிவாலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.  பின்வரும் தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய முடியும்.

பிறரை நம்பி பெரிய அளவிலான தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

வருடம் பிறக்கும்போது செவ்வாய் 2-ல் இருப்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசிப் பழகுவது அவசியம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.

குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேலோங்கும் உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடுமையாக உழைத்து உங்களுக்கான செல்வத்தை ஈட்டுவீர்கள். தொழில் உழைத்து போட்டியாளர்களாலும், அரசாங்கத்தாலும் பல நெருக்கடிகளை சந்தித்தாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

வியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வேலையாள்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும். தொலைதூர பயணங்களால் லாபங்கள் உண்டாகும். மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

உத்தியோகிஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலனை உடனே பெற முடியாது. கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலம் சோதனையான காலகட்டமாகவே ஆறு விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான லாபம் ஓரளவுக்கே கிடைக்கும்.

கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டாள் பொருளாதார சிக்கலின்றி வாழலாம். கிடைக்கின்ற வாய்ப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.  பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

பரிகாரம்: கோவை மாவட்டம் வடவள்ளி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு காட்டு விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபட சங்கடங்கள் நீங்கும்.

உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்

தினமும் நேர்மறையான வார்த்தைகளை பயன் படுத்துங்கள்

நன்றியையும் பாராட்டுதலையும் வெளிப்படுத்துங்கள்

ஓம் கம் கணேஷாய நமஹ அல்லது ஓம் வக்ரதுண்டாய ஹும்

என்ற கணேஷ மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல், மே, ஜூன், மற்றும் ஜூலை

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Comment