மகரம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Magaram Rasi palan 2019

பிறருடன் அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டில் பொருளாதார நெருக்கடி நிலை நீங்கும்.  தடைகள் ஏற்பட்டாலும் முயற்சியினால் முன்னேற்றம் ஏற்படும் வருடமாக அமையும். இவ்வளவு நாட்கள் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தடைபட்டு உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சொந்தம் கொண்டாடுவார்கள்.

வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

வருடம் முழுவதும் சனி விரயச் சனியாக இருப்பதால், அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். வேலைச்சுமை அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் உறக்கம் குறையும். கடந்து போன கசப்பான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. கடன்களால் கௌரவம் குறைந்துவிடுமோ என்று அடிக்கடி கவலைப் படுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வாங்கிய கடன்கள் அனைத்தையும் செய்து அடைத்துவிடக்கூடிய சூழல் உண்டாகும். விரயச் சனி தொடர்வதால், புதுத் தொழில் தொடங்குவதைத் தவிர்ப்பதுடன், பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.

வேலையாள்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள்கள் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். அலுவலகத்தில் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கவேண்டி வரும். ஆனாலும், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இழந்த சலுகைகளை திரும்பப் பெறுவீர்கள்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய வாழ்வில் செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமையும். புதிய நிலங்கள் வாங்கி அதிலும் விவசாயம் செய்து லாபத்தை அடைவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும். மாணவ மாணவியரின் கல்வி நிலை உயரும். படிப்பதுடன் படித்தவற்றை மறுபடி எழுதிப் பார்ப்பது அவசியம். கடினமாக உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

பரிகாரம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு லட்சுமி கோபாலரை சனிக்கிழமைகளில் சென்று வழிபடுவது முன்னேற்றம் தருவதாக அமையும்.

குருமார்கள் மற்றும் பெற்றோரின் ஆசி பெறுங்கள்

உங்கள் பேச்சில் நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்

கல்வி சார்ந்த உதவிகளைச் செய்யுங்கள்

கோவில் புனர்நிர்மானத்திற்கு உதவுங்கள்

ஓம் கேதவே நமஹ அல்லது ஓம் மிருத்யு புத்ராய நமஹ

என்ற கேது மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

சாதகமான மாதங்கள் : மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Comment