மீனம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Meenam Rasi palan 2019

அனைத்திலும் சிறந்த ஞானம் கொண்ட மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு சிறப்பாகவே இருக்கும். இந்த வருடம் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியைத் தருவதாகவும் அமையும். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களை விட்டு கஷ்டங்கள் சென்றவர்களும் உங்களிடம் வலிய வந்து நட்பு பாராட்டும் நிலையை உண்டாகும். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும்.

வருடம் முழுவதும் சனி 10-ல் இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனாலும், உத்தியோகத்தில் சில பிரச்னைகள், வீண்பழிகள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்கும், கௌரவப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செலவைக் குறைத்து சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.

செவ்வாய் ராசியில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சில் கம்பீரம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் கட்டி வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது. லாபம் அதிகரிக்கும்.

சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். அனுபவம் மிக்க வேலையாள்கள் பணியில் சேருவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல்பொருள் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.

பணியிடங்களில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வையும் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை முடிப்பதில் சுணக்கம் காட்டவேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு பணியே சிறந்த செயல்பாடுகளால் கட்சிகளில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அதோடு அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வீர்கள்.

பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு விருத்தகிரீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட நன்மைகள் கூடும்.

பெரியவர்களுக்கு சேவை செய்யுங்கள்

முன்னோர்கள் மற்றும் பெற்றோரின் ஆசி பெறுங்கள்

உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்

ஓம் ஷம் சநேஸ்வராய நமஹ

என்ற சனி மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை

 

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Comment