மேஷ ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. mesham rasi palan 2019

வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வந்தாலும் பின்பு வரும் காலங்களில் நெருக்கடிகள் எந்த ஒரு குறையும் இருக்காது.

நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றிபெறுவீர்கள். அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பதவி உயர்வுகளை பெரும் யோகம் உண்டு. கோவில் சம்பந்தமான புனித காரியங்களில் ஈடுபட்டு கௌரவத்தையும் ஆண்டவனின் அருளையும் பெறுவீர்கள். மாணவர்களே, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடன் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுங்கள்

அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல் ஏற்படும். பாதிக்கப்பட்டு மீள்வார்கள். வீட்டில் திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் இந்தாண்டு நடக்க அதிக வாய்ப்புண்டு. புதிதாக தொடங்கப்படும் தொழில் வியாபார முயற்சிகளில் சிறிது கடிமான காலகட்டங்களை கடந்த பிறகே சிறந்த பலன்களை பெற முடியும். பற்று வரவு கணிசமாக உயரும்.

வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்குவீர்கள். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்கள் வகையில் லாபம் கிடைக்கும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலார்கள் மற்றும் வேலையாட்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பணியிலிருப்பவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். குரு 8-ல் இருப்பதால் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரிகளின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். இடமாற்றம் ஏற்படக்கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

புதிதாக வேலை தேடும் நபர்களுக்கும் பல தடங்கல்களுக்கு பிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளின் பணிகளுக்கான முயற்சிகள் வெற்றியடையும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்று தர்ம சங்கடமான நிலை ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு இந்தாண்டு நல்ல வாய்ப்புகள் அமையும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பெற்ற பிள்ளைகள் வழியில் ஒரு சில சங்கடங்கள் ஏற்படலாம். மாணவ – மாணவியர் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்தினால் கல்வியில் சிறக்கலாம்

பரிகாரம்: கோவை மாவட்டம் தாளக்கரை தண்டுக்காரன்பாளையம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் தரிசிப்பது நல்லது.

செவ்வாய்க் கிழமைகளில் ஏழைகளுக்கு முடிந்த அளவு மருத்துவ உதவியோ / பணமோ தந்து உதவுங்கள்

ஏழைகளுக்கு உதவி புரிவதை வழக்கமாக செய்யுங்கள்

ஆசிரியர் மற்றும் வழிகாட்டிகளின் ஆசி பெறுங்கள்

சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான செயலை சரியான வழியில் சரியான நோக்கத்துடன் செய்வதற்கும் அனைத்தும் உங்களுக்கு இசைந்த வகையில் இருப்பதற்கும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 1௦8 முறை ஜபம் செய்யுங்கள்.

ஓம் குருவே நமஹ அல்லது ஓம் திவ்ய பூஷனாய நமஹ என்ற குரு மந்திரத்தை வியாழக் கிழமைகளில் 108 முறை சபிக்கவும்.

சாதகமான மாதங்கள்: ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Comments

comments

Leave a Comment