மிதுனம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Midhunam Rasi palan 2019

சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு பிறக்கின்ற 2019 ஆம் ஆண்டு சாதக, பாதகங்கள் சம அளவு கலந்ததாகவே இருக்கும். இந்த வருடம் நீண்ட கால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும். அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கும். பண விவகாரங்களில் நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை வருடத்தின் முதல் மூன்று மாதம் வரை ஒத்தி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். இந்தாண்டு நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்குமிடையே சில பிரச்சனைகள் ஏற்படலாம். பிறருக்கு உறவினர்களுக்குமிடையே கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். இருந்தாலும் அவற்றை முறியடித்து நல்ல லாபங்களை ஈட்டுவீர்கள்.

வியாபாரம் செழிக்கும். வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியுடன் சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். ஏற்றுமதி – இறக்குமதி, காய்கறி, ஹார்ட்வேர்ஸ் வகைகளால் ஆதாயம் கிடைக்கும்.

பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எல்லாம் நலமாக முடியும். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்ல கூடிய நிலை ஏற்படும். எல்லாவற்றிலும் செல்ல இருப்பது அவசியமாகும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். உங்கள் தொலைநோக்குச் சிந்தனைகள் பலராலும் பாராட்டப்படும். ஆனாலும் அவ்வப்போது அதிகாரிகளுடன் சின்னச் சின்ன மனக் கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களும் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாறுதல் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் கலைத்திறன் வளரும். பாராட்டுகளுடன் பரிசுகளும் கிடைக்கும்.. திருமணம் வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் முதலில் சில காலம் சற்று மந்த நிலையை அடைந்தாலும், பிறகு கல்வியில் சிறப்பார்கள். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கலை, இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம் நஞ்சை மகத்து வாழ்க்கை என்னும் ஊரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். .

இந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்

சனிக்கிழமைகளில் நோயாளிகளுக்கு உணவு அளிக்கவும்

பிச்சைக்காரர்களுக்கு தானம் செய்யவும்

ஓம் கேதவே நமஹ அல்லது ஓம் மிருத்யுபுத்ராய நமஹ

என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே, மற்றும் நவம்பர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!