இன்றைய ராசிபலன் 30/6/2017 வெள்ளிக்கிழமை

*மேஷம்*

_மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர் கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்._

 

*ரிஷபம்*

_ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் கள் யார் என்பதை கண்டறி வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்._

 

*மிதுனம்*

_மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். கடனாக கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்._

 

*கடகம்*

_கடகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்._

 

*சிம்மம்*

_சிம்மம்: காலை 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்._

 

*கன்னி*

_கன்னி: காலை 7 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்._

 

*துலாம்*

_துலாம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்._

 

*விருச்சிகம்*

_விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்._

 

*தனுசு*

_தனுசு: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்._

 

*மகரம்*

_மகரம்: காலை 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உறவினர் களால் நன்மை உண்டு. வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்._

 

*கும்பம்*

_கும்பம்: காலை 7 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் ஒய்வெடுக்க முடியா மல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ள வில்லை என்று நினைப்பீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத் தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோ கத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்._

 

*மீனம்*

_மீனம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா பாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்…

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!