இன்றைய ராசிபலன் 5/7/2017 புதன்கிழமை

*மேஷம்*

_மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமை, உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். சிலரிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்._

 

*ரிஷபம்*

_ரிஷபம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்._

 

*மிதுனம்*

_மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்._

 

*கடகம்*

_கடகம்: வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்._

 

*சிம்மம்*

_சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்._

 

*கன்னி*

_கன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்ததை முடிக்கும் நாள்._

 

*துலாம்*

_துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் வரும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்._

 

*விருச்சிகம்*

_விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதியமுயற்சிகள் தள்ளிப்போய் முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வளைந்து கொடுக்க வேண்டிய நாள்._

 

*தனுசு*

_தனுசு: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்._

 

*மகரம்*

_மகரம்: பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்._

 

*கும்பம்*

_கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்._

 

*மீனம்*

_மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சிபடி செயல்படும் நாள்….

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!