ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Rishabam Rasi palan 2019

தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். இந்த வருடம் சுற்றியிருப்பவர்களின் சுயநலப் போக்கை உணர வைப்பதுடன் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

கணவன் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

உங்களுடைய உடல்நிலை பெரும்பாலும் நன்றாக இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை அடைத்து விடுவீர்கள்.தொழில், கடந்தகாலங்களில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும்.

வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும்.  வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி முதலீடு செய்யவேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். வேலையாள்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் பிரிவு ஏற்படக்கூடும்.

பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அலுவலகத்தில் நிலையற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதே நல்லது. அதிகாரிகள் குறை கூறினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். அவதூறு வழக்குகளும் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும்.

கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள், பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.. விரும்பிய மேற்படிப்புகளை படிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்

பரிகாரம்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமியை கிருத்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வழிபடுங்கள்.வாழ்வு சிறக்கும்.

இந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்

 

சனிக் கிழமைகளில் உடல் நலம் குன்றியவர்களுக்கு முடிந்த அளவு உணவு தந்து உதவுங்கள்

மன நலம் குன்றியவர்களுக்கு தானம் அளியுங்கள்

மன அமைதி பெற பணிவுடனும் பிறருடன் அனுசரித்து/ விட்டுக்கொடுத்து செல்லவும்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீ மஹே

தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

என்ற சிவ மந்திரத்தை 108 முறை சொல்லவும்

சனீஸ்வர ஸ்லோகத்தை 108 முறை சொல்லவும்

ஓம் சநேச்சராய நமஹ அல்லது ஓம் நீலாம்பர விபூஷனாய நமஹ

சாதகமான மாதங்கள் : ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!