Sani Peyarchi Palangal 2017-2020 Parigarangal

வரும் செவ்வாய்க்கிழமை 19/12/2017 அன்று நடைப்பெற இருக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள்…

சனிப்பெயர்ச்சி 19.12.17 முதல் 26.12.20 மற்றும் பரிகாரங்கள்.

Sani Peyarchi palangal

மேஷம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 

https://goo.gl/Aci4PE

உங்களது ராசிக்கான மதிப்பெண் 65/100.

பரிகாரங்கள்:

ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

பசியால் வாடும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்தவரை அன்னதானம் அளியுங்கள். தினமும் முருகனை வழிபடுங்கள். ‘‘ஓம் சரவணபவ’’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறுவது சிறந்தது. ஏகாதசி நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் சிறந்த பலன்களை பெறலாம்.

ரிஷபம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 –

https://goo.gl/2zyUDY

உங்களது ராசிக்கான மதிப்பெண் 35/100.

பரிகாரங்கள்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.

கல்விக்கு பணம் இன்றி தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். உங்கள் வீட்டருகில் இருக்கும் பெருமாள் கோயிலிற்கு சென்று அங்குள்ள ஆண்டாளை வழிபட்டால் நல்ல பலன் உண்டு. திருவொற்றியூரில் அருள்பலிக்கும் ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையம்மனையும் வழிபட்டால் உயர்வு உண்டு.

 

மிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 –

https://goo.gl/8aoKpx

உங்களது ராசிக்கான மதிப்பெண் 45/100.

பரிகாரங்கள்:

கோவை மாவட்டம், இருளர்பதி எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுயம்பு பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும்.

கோவிலை புதுப்பிக்கும் பனி எங்கேனும் நடந்தால் உங்களால் முடிந்து உதவியை செய்யுங்கள். சனிக்கிழமைகளில் வீட்டருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்துவாருங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும். தினமும் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை கூறுவதன் பயனாக உயர்வு உண்டு.

கடகம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 –

https://goo.gl/t5xbqL

உங்களது ராசிக்கான மதிப்பெண் 85/100.

பரிகாரங்கள்:

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும், பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.

ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். வீட்டருகில் உள்ள அம்மன் கோயிலிற்கு சென்று அம்மனுக்கு வேப்பிலை சார்த்தி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை தரிசித்து வந்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம்.

 

சிம்மம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 –

https://goo.gl/MSmdQp

உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100

பரிகாரங்கள்:

திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த வல்லி உடனுறை ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். சகலமும் நன்மையில் முடியும்.

மருத்துவ செலவிற்கு பணம் இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு மருத்துவ உதவு செய்யுங்கள். அருகில் உள்ள சிவன் கோயிலிற்கு சென்று இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல பலன்களை பெறலாம். “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை தினமும் துதித்து வாருங்கள்.

கன்னி ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020-

https://goo.gl/Dpo55g

உங்களது ராசிக்கான மதிப்பெண் 40/100.

பரிகாரங்கள்:

திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், வேலூர் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

பெற்றோரின்றி தவிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் இயன்றவரை உதவுங்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் அருகில் உள்ள ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலிற்கு சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள். “ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை கூறி வாருங்கள். நல்ல பலன் உண்டு.

 

துலாம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 –

 https://goo.gl/98Qp8J

உங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.

பரிகாரங்கள்:

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.

வீட்டருகில் உள்ள பசுவிற்கு அகத்தி கீரை மற்றும் வாழைப்பழத்தை அவ்வப்போது கொடுங்கள். அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வாரத்தில் ஒருநாளாவது சென்று வழிபடுங்கள். பிரதோஷ நாளில் சென்றால் மேலும் சிறப்பு. “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை கூறி வாருங்கள் வருமானத்திற்கான தடை நீங்கும்.

 

விருச்சிகம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 –

https://goo.gl/CQBwzk

உங்களது ராசிக்கான மதிப்பெண் 30/100.

பரிகாரங்கள்:

பரிகாரம்:சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

நடக்க இயலாத முதியோருக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். திருக்கடையூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதால் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். அருகில் உள்ள அம்மன் கோயிலிற்கு சென்று “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை ஜபித்து அம்மனை வழிபடுங்கள், எதிர்ப்புகள் விலகும்.

 

தனுசு ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020  –

https://goo.gl/cXALJ2

உங்களது ராசிக்கான மதிப்பெண் 20/100.

பரிகாரங்கள்:

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சகல பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும். கோயிலிற்கு வெளியே அமர்ந்து தானம் கேட்கும் முதியோர்களுக்கு அன்னதானம் அளியுங்கள். குச்சனூரில் சுயம்பு வடிவாக அருள்பாலிக்கு சனிபகவானை ஒரு முறை தரிசித்து வாருங்கள், துன்பங்கள் பறந்தோடும்.

 

மகரம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 –

https://goo.gl/r8nCRX

உங்களது ராசிக்கான மதிப்பெண் 25/100.

பரிகாரங்கள்:

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் அருளும்… வாலியால் தென்முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். வளம் பெருகும். ஏழை பெண்களின் திருமண செலவிற்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் என்னும் ஊரில் வாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். “ஓம் ஸ்ரீம்கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் கூறிவாருங்கள் வளம் பெருகும்.

 

கும்பம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020-

https://goo.gl/TKdfu2

உங்களது ராசிக்கான மதிப்பெண் 85/100.

பரிகாரங்கள்:

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.

ஏகாதசி திதி நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். எப்போதெல்லாம் முடிகிறது அப்போதெல்லாம் கந்தனை வழிபட்டு வாருங்கள். ” ஓம் சரவணபவ” என்று மந்திரத்தை தினமும் ஜபித்து வாருங்கள், நன்மைகள் அதிகரிக்கும்.

 

மீனம் ராசி சனிப்பெயர்ச்சி  பலன்கள் 19/12/2017 to 26/12/2020 –

https://goo.gl/Yi1ZBu

உங்களது ராசிக்கான மதிப்பெண் 65/100.

பரிகாரங்கள்:

திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும். சனிக்கிழமைகளில் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை தரிசித்து வாருங்கள். சித்தர்களின் சமாதிக்கு சென்று வழிபட்டு வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் இயன்றவரை உதவுங்கள். நன்மைகள் பெருகும்

 

Comments

comments

Leave a Comment