சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Simmam Rasi palan 2019

 

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சம அளவிலான பலன்கள் ஏற்படும். சுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். வருடத் தொடக்கம் அலைச்சலையும் வருடத்தின் மத்திய பகுதியிலிருந்து முன்னேற்றத்துடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

சுப காரிய வாழ்க்கையில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.

ராசிக்கு செவ்வாய் 8-ல் நிற்கும்போது வருடம் பிறப்பதால், உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

ஒரு சிலருக்கு ஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பொருளாதார வேண்டிய ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். குடும்ப பாரம்பரிய சொத்துகள் சிறிது இழுபறிக்கு பின்பு உங்களுக்கான பாகம் வந்து சேரும்.

அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களே,  படிப்பில் முழுமையான கவனம் செலுத்தவேண்டியது அவசியம். பொறுப்பு உணர்ந்து படித்தால்தான் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். விளையாடும்போது கவனமாக இருக்கவும்.

புதிய தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கும், அவற்றை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் சிறிது தடங்கல்களுக்கு பின்பு வெற்றி உண்டாகும். தொழிலாளர்கள் மற்றும் பணியாட்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றும் சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். பணியாளர்கள், ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிர்பாரா பணியிடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும்.

புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது நல்லது. பிப்ரவரி 13-ம் தேதி முதல் ராகு சாதகமாக இருப்பதால், அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால், பணிச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதல் பணிகளை ஒப்படைப்பார்கள். சலித்துக்கொள்ளாமல் முடித்துக்கொடுப்பது நல்லது.

உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. பதவி உயர்வு தள்ளிப் போகும். சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

பரிகாரம் : விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமியை சஷ்டி திதி நாளில் சென்று தரிசித்து வழிபட மகிழ்ச்சி பெருகும்.

தான தர்மங்கள் போன்ற செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

கனிவான வார்த்தைகளை பேசுங்கள்

பெற்றோருடன் நல்லுறவு கொள்ளுங்கள்

ஓம்சூர்யாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

ஓம் ராஹவே நமஹ அல்லது ஓம்ஷ்யாமாத்மனே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே ஜூன், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Comment