தனுசு ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Thanusu Rasi palan 2019

பிறருக்கு உதவி புரியும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்கார்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் சில தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைக்கும்.  தேவையற்ற நிதானமாக சிந்தித்து செயல்படுவது உங்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொலை தூர பயணங்களால் ஓரளவிற்கு அனுகூலங்கள் இருக்கும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும்.

வருடம் முழுவதும் ஜன்மச் சனி தொடர்வதால், அடிக்கடி பழைய கசப்பான நிகழ்ச்சிகளை நினைத்து உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசியவற்றை மறக்கப் பாருங்கள். படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர் கண்களைப் பரிசோதித்து கண்ணாடி அணிய நேரிடும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் ஏற்படும். மற்றவர்களை எடுத்தெறிந்து பேசவேண்டாம். வழக்குகளால் கவலை ஏற்பட்டு நீங்கும்.

உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உறுதுனையாக இருப்பார்கள். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு சற்று நிம்மதி ஏற்படும். காண்ட்ராக்ட் தொழிலில் இருப்பவர்களுக்கு நிம்மதி தொடக்கத்தில் பொருள்வரவு குறைந்தாலும் பின் வரும் காலங்களில் நல்ல தனவரவு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் கிடைக்கும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும், ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகிஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியும் திருப்தியான நிலையும் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். ஆனால், ஜன்மச் சனி தொடர்வதால் மனதில் இனம் தெரியாத அச்ச உணர்வு இருந்தபடி இருக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.  அரசியல்வாதிகள் பொது மக்களின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு அரசு கடினமாக எதிர்பார்த்த பயிர் மானியங்கள் கிடைக்கும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தீய சிந்தனைகள் மற்றும் செயல்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது அவசியமாகும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அவ்வப்போது தூக்கம், மறதி ஏற்பட்டு நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர அதிக செலவு செய்யவேண்டி வரும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சரபேஸ்வரரை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடுங்கள். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

தினமும் நல்லதையே நினையுங்கள்

ஆசிரியர் மற்றும் குருமார்களின் ஆசி பெறுங்கள்

உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்

மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணத்துடன் இருங்கள்.

ஓம் தும் துர்கையே நமஹ

என்ற ராகு மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல், மே மற்றும் நவம்பர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Comment