துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Thulam Rasi palan 2019

கள்ளமில்லா உள்ளம் கொண்ட துலாம் ராசியினருக்கு பிறக்கின்ற 2019 ஆண்டு சிறப்பாக இருக்கும்.  இந்தப் புத்தாண்டு பணவரவையும், செல்வாக்கையும், பதவிகளையும் பெற்றுத் தருவதாக இருக்கும். இது நாள் வரை இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். நின்று வந்த தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். உடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். குழந்தைகள் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.  உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்படும்

பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள், புதிய வீடு, புதிய வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் உண்டாகும். நீங்கும். அவர்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்வீர்கள். வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும். 13.2.19 முதல் அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும் அதிகம் உழைக்கவேண்டி வரும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க சற்று போராடவேண்டி இருக்கும்.

மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மனதுக்குப் பிடித்தமான வகையில் இடமாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் சாதித்துக் காட்டவேண்டும் என்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ற உழைப்பும் வேண்டும். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. மொழித் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.

வியாபாரிகள் போட்டிகளையும் கடந்து லாபம் சம்பாதிப்பீர்கள். புது வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். வேலையாள்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும். ஸ்டேஷனரி, பேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை அடைத்து விடக்கூடிய அளவில் பொருளாதார நிலை உயரும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் உயரும். யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும். அதோடு ஆபரணம், ஆடை போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு திரிசக்தி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட, பிரச்னைகள் குறைந்து வெற்றிகள் சேரும்.

தொண்டு செய்யுங்கள்

பெற்றோரின் ஆசி பெறுங்கள்

அன்பான மற்றும் கனிவான வார்த்தைகளைப் பேசுங்கள். கடுமையான சொற்களை தவிர்த்துவிடுங்கள்

தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்யவும்.

ஓம் சநேஸ்வராய நமஹ

என்ற மந்திரத்தை 1௦8 முறை தியானம் செய்யவும்.

சாதகமான மாதங்கள் : ஜனவரி பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல், மே, நவம்பர் மற்றும் டிசம்பர்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

1 Comment

  • viruchigam rasi anusham natchathiram .2016 dec la pharma company start panni inaiku varaikum entha profit um illama selavu than increase agthu..egapatta kadan vanthuruchu..engaluku epo varumanam varum?kadan adaiyum.please tell.

Leave a Comment