இன்றைய ராசிபலன் 27/6/2017 செவ்வாய்க்கிழமை

*மேஷம்*

_மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நன்மை கிட்டும் நாள்._

 

*ரிஷபம்*

_ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்._

 

*மிதுனம்*

_மிதுனம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். முகப்பொலிவுக் கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்._

 

*கடகம்*

_கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிலவேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனை விக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்._

 

*சிம்மம்*

_சிம்மம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்._

 

*கன்னி*

_கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்._

 

*துலாம்*

_துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்களுக்காக சில உதவிகள் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்._

 

*விருச்சிகம்*

_விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்._

 

*தனுசு*

_தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத் தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்._

 

*மகரம்*

_மகரம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். எதிர் பாராத சந்திப்பு நிகழும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசு வார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். இனிமையான நாள்._

 

*கும்பம்*

_கும்பம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப் பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண் டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்._

 

*மீனம்*

_மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத் யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்…

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!