இன்றைய பஞ்சாங்கம்  மற்றும் ராசிபலன் 28/1/2019 தை 18 வெள்ளிக்கிழமை | Today rasi palan

பஞ்சாங்கம்

*தை – 18*
*பிப்ரவரி – 01 – ( 2019 )*
*வெள்ளிக்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*க்ருஷ்ண*
*த்வாதசி ( 37.40 ) ( 09:40pm )*
&
*த்ரயோதசி*
*ப்ருகு*
*மூலம் ( 42.42 ) ( 11:05pm )*
&
*பூராடம்*
*வ்யாகாத யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – த்வாதசி*

*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*

_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*ரிஷப ராசி* க்கு ஜனவரி 31 ந்தேதி இரவு 09:31 மணி முதல் பிப்ரவரி 03 ந்தேதி காலை 07:39 மணி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:43am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:11pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*அமிர்த யோகம் – ஸித்த யோகம்*_

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்குகடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். மகளுக்குநல்ல வரன் அமையும். தொழிலில் லாபம்அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு.சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க லையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும்.வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களைகுறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மகரம்

மகரம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

மீனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!