இன்றைய ராசிபலன் 10/12/2018 கார்த்திகை 24 திங்கட்கிழமை

மேஷம்

மேஷம்: உணர்ச்சிப் பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசவீர்கள், செயல்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்குவரும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மாலை 5.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டி ருக்க வேண்டாம். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபா ரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மாலை 5.14மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டை புதுப்பிப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று
வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின்நிர்வாகத்திறமை வெளிப்படும். அமோகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் கணிசமாகலாபம் உயரும். உத்யோகத்தில் விமர்
சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக் கப்படுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

தனுசு

தனுசு: மாலை 5.14 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

மகரம்

மகரம்: ஒய்வெடுக்க முடியா மல் உழைக்க வேண்டிவரும். உறவினர், நண்பர் களுடன் மனத்தாங்கல் வரும்.அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைய லாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். மாலை 5.14 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ் வீர்கள்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.

மீனம்

மீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்…

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!