இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.07.2019 புதன்கிழமை ஆனி 25 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆனி – 25*
*ஜூலை – 10 – ( 2019 )*
*புதன்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*க்ரீஷ்ம*
*மிதுன*
*ஸுக்ல*
*அஷ்டமி ( 4.8 ) ( 07:36am )*
&
*நவமி ( 55.23 )*
*ஸௌம்ய*
*சித்திரை ( 36.14 ) ( 08:24pm )*
&
*ஸ்வாதி*
*ஸிவ யோகம்*
*பவ கரணம் ( 4.8 ) ( 07:36am )*
&
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – நவமி*

_*சந்திராஷ்டமம் – மீன ராசி*_

_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._

_*மீன ராசி* க்கு ஜூலை 10 ந்தேதி காலை 09:05 மணி முதல் ஜூலை 12 ந்தேதி மதியம் 01:16 மணி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:00am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 11:24am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_

 

ஹோரை புதன்கிழமை

காலை 🔔🔔

6-7.புதன். 💚 👈சுபம் ✔
7-8.சந்திரன்.💚👈சுபம் ✔
8-9. சனி.. ❤👈அசுபம் ❌
9-10.குரு. 💚 👈சுபம் ✔
10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
1-2. புதன். 💚 👈சுபம் ✔
2-3. சந்திரன்.💚 👈சுபம் ✔

மாலை 🔔🔔
3-4. சனி.. ❤👈அசுபம் ❌
4-5. குரு. 💚 👈சுபம் ✔
5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.07.2019 புதன்கிழமை ஆனி 25 | Today rasi palan

மேஷம்

மேஷம்: உங்களுடைய அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்து காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி

கன்னி:  காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார்.

துலாம்

துலாம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். வியாபாரத் தில் சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும்.
உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும்.

விருச்சிகம்

விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.

தனுசு

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

மகரம்

மகரம்:  உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும்.

கும்பம்

கும்பம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.

மீனம்

மீனம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவ தால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்…

Comments

comments

Leave a Comment