இன்றைய ராசிபலன் 11.06.2019 செவ்வாய்க்கிழமை வைகாசி (28) | Today rasi palan

*பஞ்சாங்கம் ~ வைகாசி ~ *28*
*{11.06.2019}* *செவ்வாய்கிழமை.*
*வருடம்*~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ *உத்தராயணம்*.
*ருது*~ வஸந்த ருதௌ.
*மாதம்*~ வைகாசி ( ரிஷப மாஸம்)
*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*
*திதி ~ நவமி.*
*ஸ்ரார்த்த திதி ~ நவமி.*
*நாள்* ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் } ~~~~~~~~~~~~ *நக்ஷத்திரம்*~ உத்திரம் பிற்பகல் 02.45 PM.வரை. பிறகு ஹஸ்தம்.
*யோகம்*~ அமிர்த, சித்த யோகம்.
*கரணம்* ~ பாலவம் , கௌலவம்..
*நல்ல நேரம்*~ காலை 07.30 AM ~ 08.30 AM & 04.30PM ~ 05.30 PM .
*ராகு காலம்*~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM .
*எமகண்டம்*~ காலை 09.00 AM ~10.30 AM.
*குளிகை* ~ 12.00 NOON ~ 01.30 PM.
*சூரிய உதயம்*~ காலை 05.52 AM.
*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.31 PM.
*சந்திராஷ்டமம்*~ சதயம், பூரட்டாதி.
*சூலம்*~ வடக்கு .
*பரிகாரம்*~ பால் .
*இன்று ~ * 🙏🙏
*🚩🕉SRI RAMAJEYAM🕉🚩*

*PANCHCHAANGAM* ~ *VAIKAASI*~ *28 (11.06.2019)* ~ *TUESDAY.*
*YEAR*~ VIKAARI VARUDAM { VIKAARI NAMA SAMVATHSARAM}
*AYANAM ~ UTHTHARAAYANAM*.
*RUTHU:*~ VASANTHA RUTHU.
*MONTH ~ VAIKAASI (RISHABHA MAASAM)*
*PAKSHAM* ~ SUKLA PAKSHAM.
*THITHI* ~ NAVAMI.
*SRAARTHTHA THTHI ~ NAVAMI*
*DAY*~ TUESDAY( POUMA VAASARAM)
*NAKSHATHRAM ~ UTHTHIRAM UPTO 02.45 PM. AFTERWARDS HASTHAM .*
*YOGAM*~ AMIRDHA, SIDHDHA YOGAM .
*KARANAM* ~ *BAALAVAM, KAULAVAM.*
*RAGU KALAM*~03.00 PM~04.30PM.
*YEMAGANDAM*~09.00 ~10.30 AM.
*KULIGAI*~12.00 PM ~ 01.30 PM.
*GOOD TIME*~ 07.30 AM TO 08.30 AM & 04.30 PM ~ 05.30 PM.
*SUN RISE* ~ 05.52 AM.
*SUN SET ~ 06.31 PM*
*CHANTHRASHTAMAM* ~ SADHAYAM, POORATTAADHI.
*SOOLAM* ~ NORTH .
*Parigaram* ~ MILK .
*TODAY*~ **🙏🙏🙏🙏

💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
இன்றைய ராசிபலன்கள்.
செவ்வாய்க்கிழமை 11.06.2019

மேஷம் ராசியின் 11.06.2019 🌎🌎
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பிள்ளைகள் உங்களின் விருப்பம் போல் செயல்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : கலகலப்பான நாள்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம் ராசியின் 11.06.2019 🌎🌎
புத்துணர்ச்சியாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில காரியங்கள் சாதகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.
ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

மிதுனம் ராசியின் 11.06.2019 🌎🌎
நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனம் வேண்டும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனை அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் நிறைவேறும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

கடகம் ராசியின் 11.06.2019 🌎🌎
நினைத்த காரியங்களில் சிறிது காலதாமதம் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்துகொள்வீர்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும்.

சிம்மம் ராசியின் 11.06.2019 🌎🌎
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் பொறுப்புகள் குறையும். மனதில் இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை அகலும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : அன்பு அதிகரிக்கும்.
பூரம் : தெளிவு பிறக்கும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசியின் 11.06.2019 🌎🌎
ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பணிகளை முடிப்பதில் துரிதம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கனிவு வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
அஸ்தம் : துரிதம் உண்டாகும்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.

துலாம் ராசியின் 11.06.2019 🌎🌎
வியாபாரத்தில் செய்யும் மாற்றங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழல் மற்றும் சோர்வு ஏற்படும். சகோதரர்களின் மூலம் நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.
சுவாதி : தேவைகள் நிறைவேறும்.
விசாகம் : அனுகூலமான நாள்.

விருச்சகம் ராசியின் 11.06.2019 🌎🌎
வியாபாரம் தொடர்பான சில பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வழக்குகள் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய பயிற்சிகள் தொடர்பான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : அன்பு அதிகரிக்கும்.

தனுசு ராசியின் 11.06.2019 🌎🌎
வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தைவழி தொடர்பான சொத்துக்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : மாற்றமான நாள்.
பூராடம் : பாராட்டப்படுவீர்கள்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம் ராசியின் 11.06.2019 🌎🌎
உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். ஆன்மீக காரியங்களில் மனதை செலுத்தும் போது நிம்மதியான சூழல் அமையும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
அவிட்டம் : பதற்றமின்றி செயல்படவும்.

கும்பம் ராசியின் 11.06.2019 🌎🌎
மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனத்தை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : புதுமையான நாள்.

மீனம் ராசியின் 11.06.2019 🌎🌎
கூட்டாளிகளின் மூலம் தனவரவு மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். மனைவி வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். சகோதரர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : தனவரவு மேம்படும்.
உத்திரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.

🙏🙏🙏

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!