Daily Raasi Palan

Today rasi palan 12/12/2017 | இன்றைய ராசிபலன் 12/12/2017 கார்த்திகை (26) செவ்வாய்க்கிழமை

Today Rasi Palan

Today rasi palan 12/12/2017

இன்றைய ராசிபலன் 12/12/2017 கார்த்திகை (26) செவ்வாய்க்கிழமை.!!

மேஷம்

மேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நன்மை கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். தோற்றப்பொலிவுக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த வேலையை தொட்டாலும் இழுபறியாகவே இருக்கிறதே என்று டென்ஷனாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விட்டுக் கொடுத்துப்போக வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் அளவாக பழகுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.

தனுசு

தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்…

 

Comments

comments

Leave a Comment