இன்றைய ராசிபலன் 12.06.2019 புதன்கிழமை வைகாசி (29) | Today rasi palan

*பஞ்சாங்கம்* ~ *வைகாசி*
~ *29* ~
*{12.06.2019.}* *புதன்கிழமை*.
*வருடம்*~ விகாரி வருடம். (விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ உத்தராயணம்.
*ருது*~ வஸந்த ருதௌ.
*மாதம்*~ வைகாசி ( ரிஷப மாஸம்)
*பக்ஷம்*~ சுக்ல பக்ஷம்.
*திதி*~ தசமி இரவு 07.51 PM. வரை. பிறகு ஏகாதசி .
*ஸ்ரார்த்த திதி ~ தசமி.*
*நாள்* ~~ புதன்கிழமை { ஸௌம்யவாஸரம் } ~~~~~~~ *நக்ஷத்திரம்*~ ஹஸ்தம் பிற்பகல் 01.24 PM . வரை. பிறகு சித்திரை.
*யோகம்*~ பிற்பகல் 01.24 PM. வரை சரி இல்லை. பிறகு சித்த யோகம் .
*கரணம்*~ கரஜை, வணிஜை.
*நல்ல நேரம்*~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM .
*ராகு காலம்*~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM .
*எமகண்டம்*~ காலை 07.30 ~ 09.00 AM.
*குளிகை* ~ 10.30 AM ~ 12.00 NOON. .
*சூரிய உதயம். ~ காலை 05.52 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.32 PM*
*சந்திராஷ்டமம்*~ பூரட்டாதி, உத்திரட்டாதி .
*சூலம்*~ வடக்கு .
*பரிகாரம்*~ பால் .
*இன்று*— *.*🙏🙏

*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*PANCHAANGAM*
*VAIKAASI ~ 29 ~ (12.06.2019) WEDNESDAY.*
*YEAR*~ VIKAARI VARUDAM {VIKAARI NAMA SAMVATHSARAM}
*AYANAM* ~ UTHTHARAAYANAM .
*RUTHU*~ VASANTHA RUTHU.
*MONTH*~ VAIKAASI ( RISHABHA MAASAM}
*PAKSHAM*~ SUKLA PAKSHAM.
*THITHI*~ DHASAMI UPTO 07.51 PM. AFTERWARDS EKADHASI.
*SRAARTHTHA THITHI ~ DHASAMI*
*DAY*~ WEDNESDAY( SOWMYA VAASARAM)
*NAKSHATHRAM* ~ HASTHAM UPTO 01.24 PM. AFTERWARDS CHITHTHIRAI.
*YOGAM*~ UPTO 01.24 PM. YOGAM NOT GOOD. AFTERWARDS SIDHDHA YOGAM .
*KARANAM ~ GARAJAI,VANIJAI.*
*RAGU KALAM*.~:12.00 PM~01.30PM.
*YEMAGANDAM*~ 07.30 ~ 09.00 AM.
*KULIGAI*: ~ 10.30AM ~12.00 PM .
*GOOD TIME*~ 09.30 AM TO 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM.
*SUN RISE* ~ 05.52 AM.
*SUN SET ~ 06.32 PM.*
*SOOLAM* ~ NORTH .
*PARIGARAM*~ *MILK*~~~~~~~ . *TODAY ~ .*🙏🙏🙏🙏💐

மேஷம்

மேஷம்: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோ கம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதிகிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். விருந் தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை யெல்லாம் சரியாக பயன்படுத் தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினரை பற்றி வெளி நபர்களிடம் குறைக் கூறி பேச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். எங்குச் சென்றா லும் நல்ல வரவேற்பு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

தனுசு

தனுசு: எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். சகோதரங்களால் உதவிகள் உண்டு. நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துச் செல்லும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

மீனம்

மீனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடி யும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்…

Leave a Comment