இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.07.2019 வெள்ளிக்கிழமை ஆனி 27 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆனி – 27*
*ஜூலை – 12 – ( 2019 )*
*வெள்ளிக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*க்ரீஷ்ம*
*மிதுன*
*ஸுக்ல*
*ஏகாதசி ( 53.4 )*
*ப்ருகு*
*விசாகம் ( 32.53 ) ( 06:48pm )*
&
*அனுஷம்*
*ஸாத்ய யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – ஏகாதசி*

_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_

_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._

_*மேஷ ராசி* க்கு ஜூலை 12 ந்தேதி மதியம் 01:16 மணி முதல் ஜூலை 14 ந்தேதி இரவு 07:34 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:00am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:48am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஸ்மார்த்த ஏகாதசி*_
_*ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி*_
&
_*ஸயன ஏகாதசி*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*நாஸ யோகம் – ஸித்த யோகம்*_

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சிபெறுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். பிற்பகல் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி

கன்னி: மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.

துலாம்

துலாம்: பிற்பகல் 1.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். பிற்பகல் 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.

மகரம்

மகரம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்ப டைப்பார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

மீனம்

மீனம்: பிற்பகல் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

 

Comments

comments

Leave a Comment