இன்றைய ராசிபலன் 13/1/2019 மார்கழி ( 29 ) ஞாயிற்றுக்கிழமை | today rasi palan

மேஷம்

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சாணக்கியத் தனமாகப் பேசி சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கன்னி

கன்னி: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். தாயா ரின் உடல் நலம் சீராகும். புது வேலைக் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக் கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனநிறைவு கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப் பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். வேலைச்சுமை மிகுந்த நாள்…

Leave a Comment