Daily Raasi Palan

Today rasi palan 13/12/2017 | இன்றைய ராசிபலன் 13/12/2017 கார்த்திகை (27) புதன்கிழமை

Today Rasi Palan

Today rasi palan 13/12/2017

இன்றைய ராசிபலன் 13/12/2017 கார்த்திகை (27) புதன்கிழமை.!!

மேஷம்

மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் அறிமுக
மாவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர் கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அர சால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். அமோக மான நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

கடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களால் புது அனுபவம் கிடைக்கும். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் அமைதி நிலவும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

கன்னி

கன்னி: காலை 11.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

துலாம்

துலாம்: காலை 11.40 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர் களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோ ரின் ஆதரவுக் கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிறப்பான நாள்.

மகரம்

மகரம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள் சாதிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: காலை 11.40 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்

மீனம்: காலை 11.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப்புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். பொறுமைத் தேவைப்படும் நாள்…

Comments

comments

Leave a Comment