இன்றைய ராசிபலன் 13/12/2018 கார்த்திகை 27 வியாழக்கிழமை

🌐இன்றைய பஞ்சாங்கம்🌐

🌷13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.45 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.45 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்🌷

🌷இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00🌷

🌼இன்றைய ராசிப்பலன்🌼

⭐மேஷம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

⭐ரிஷபம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

⭐மிதுனம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

⭐கடகம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது.

⭐சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

⭐கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.

⭐துலாம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

⭐விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.

⭐தனுசு

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

⭐மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

⭐கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சுபநிகழ்வுகள் நடைபெறும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும்

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!