இன்றைய ராசிபலன் 13.05.2019 திங்கட்கிழமை சித்திரை (30) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*சித்திரை – 30*
*மே – 13 – ( 2019 )*
*திங்கட்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*வஸந்த*
*மேஷ*
*ஸுக்ல*
*நவமி ( 21.13 ) ( 02:23pm )*
&
*தசமி*
*இந்து*
*மகம் ( 9.13 ) ( 09:35am )*
&
*பூரம்*
*த்ருவ யோகம் ( 3.59 ) ( 07:11am )*
&
*வ்யாகாத யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – நவமி*
&
*தசமி*

_*சந்திராஷ்டமம் – மகர ராசி*_

_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*மகர ராசி* க்கு மே 12 ந்தேதி காலை 11:20 மணி முதல் மே 14 ந்தேதி மதியம் 01:43 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 05:59am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:25pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:11am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – திதி த்வயம்*_
&
_*கோவில் ஸ்ரீராம நவமி*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா
ரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.  கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய்வழிஉறவினர்களால் அலைச்சல்ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை
பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். புது வாகனம்வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கி யத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள் புது ஏஜென்சிஎடுப்பீர்கள்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள்.  புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் பாதிக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். சிந்தித்து செயல் பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வாகனத்தில்அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்ற வர்களின் உதவியை நாடுவீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டுஅறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில்நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டிஅன்பாக திருத்துங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள்  பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். தாய்வழிஉறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.  நன்மை கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம்பொங்கும். உங்களுடைய ஆலோசனை களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  தொட்டது துலங்கும் நாள்..

Leave a Comment