இன்றைய ராசிபலன் 14/12/2018 கார்த்திகை 28 வெள்ளிக்கிழமை

 

இன்றைய ராசிபலன்கள் (14.12.2018)

மேஷம் :

வீட்டில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். திட்டமிட்டு பணிகளை செய்து முடிப்பீர்கள். கால்நடை வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : தனவரவு மேம்படும்.
கிருத்திகை : மதிப்பு உயரும்.

ரிஷபம் :

உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தெளிவு பிறக்கும். அறிவுத்திறன் மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : அறிவுத்திறன் மேம்படும்.
மிருகசீரிடம் : திருப்திகரமான நாள்.

மிதுனம் :

குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : மனக்கசப்புகள் குறையும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : கவலைகள் நீங்கும்.

கடகம் :

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் அலைச்சல்கள் ஏற்படும். சந்திராஷ்டம தினம் என்பதால் ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்படும். எனவே, நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். சாஸ்திர அறிவில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம் :

மனதில் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலை உண்டாகும். நன்பர்களிடம் கருத்துகளை பரிமாறும்போது கவனம் வேண்டும். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். பயணங்களால் எண்ணிய செயல்களில் காலதாமதம் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : பதற்றமின்றி செயல்படவும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : செயல்களில் காலதாமதம் ஏற்படும்.

கன்னி :

வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். உடல் சோர்வும், மன அழுத்தமும் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : ஒற்றுமை பிறக்கும்.
சித்திரை : பதற்றம் குறையும்.

துலாம் :

பொது நலப் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனக்கவலைகள் குறையும். வெளிநாட்டு பயணங்களில் இருந்த தடைகள் அகலும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : மேன்மையான நாள்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : தடைகள் அகலும்.

விருச்சகம் :

உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். உங்களின் செயல்பாடுகளினால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : மதிப்பு உயரும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : வெற்றி உண்டாகும்.

தனுசு :

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

மகரம் :

வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள். இழந்த பொருளை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம் :

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பதவியில் மாற்றம் மற்றும் வருவான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : கவலைகள் நீங்கும்.
சதயம் : நற்செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி : உயர்வு உண்டாகும்.

மீனம் :

நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். முடிவுகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

Comments

comments

Leave a Comment