இன்றைய ராசிபலன் 14-03-2018 மாசி (30), புதன் கிழமை | Today rasi palan 14/3/2018

இன்றைய நாள்பலன்

இன்று!
ஹேவிளம்பி வருடம், மாசி மாதம் 30ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 25ம் தேதி,
14.3.2018 புதன்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி மாலை 4:49 வரை;
அதன் பின் திரயோதசி திதி, திருவோணம் நட்சத்திரம் மதியம் 3:44 வரை;
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
* குளிகை : காலை 10:30-12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
பொது : காரடையான் நோன்பு, பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம்

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

 

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

 

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.

 

கடகம்

கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. சிறப்பான நாள்.

 

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்
கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

 

கன்னி

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று
மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.

 

துலாம்

துலாம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

 

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

 

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

 

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

 

கும்பம்

கும்பம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

 

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்.

Comments

comments

Leave a Comment