இன்றைய ராசிபலன் 15.04.2019 திங்கட்கிழமை சித்திரை (2) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*சித்திரை – 02*
*ஏப்ரல் – 15 – ( 2019 )*
*திங்கட்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*வஸந்த*
*மேஷ*
*ஸுக்ல*
*ஏகாதசி ( 49.12 )*
*இந்து*
*மகம் ( 48.33 )*
*கண்ட யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – சூன்ய திதி*

_*சந்திராஷ்டமம் – மகர ராசி*_

_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*மகர ராசி* க்கு ஏப்ரல் 15 ந்தேதி அதிகாலை 03:04 மணி முதல் ஏப்ரல் 17 ந்தேதி அதிகாலை 05:27 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:09am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:23pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:21am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஸ்மார்த்த ஏகாதசி*_
&
_*ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வரு வார்கள். உத்யோகத்தில் திருப்தி உண் டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பழைய இனிய சம்ப வங்கள் நினைவுக்கு வரும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதா யமும் உண்டு. நட்பு வட்டம்விரியும். வியாபார ரீதியாக சில முக்கி யஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். அனுபவ அறிவால்வெற்றி பெறும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வியாபா ரத்தில் வேலையாட்களால் இருந்த பிரச்னை
கள் தீரும். உத்யோகத்தில் உங்கள் உழைப் பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் பலவேலைகள் தடைப்பட்டுமுடியும். தர்மசங் கட மான சூழ்நிலைகளில்அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண் டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வு களைப் புரிந்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். போராடி இலக்கை எட்டும் நாள்.

துலாம்

துலாம்: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பழையசொந்த -பந்தங்கள்தேடிவருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள் முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதி காரி உங்களை முழுமையாக நம்புவார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந் துக்கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்

மீனம்: பணப்புழக்கம் அதி கரிக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தி னர்கள் வருகை உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்…

Leave a Comment