இன்றைய ராசிபலன் 15.06.2019 சனிக்கிழமை வைகாசி (32) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*வைகாசி – 32*
*ஜூன் – 15 – ( 2019 )*
*சனிக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*வஸந்த*
*வ்ருஷப*
*ஸுக்ல*
*த்ரயோதசி ( 24.2 ) ( 03:31pm )*
&
*சதுர்தசி*
*ஸ்திர*
*விசாகம் ( 13.2 ) ( 11:07am )*
&
*அனுஷம்*
*ஸித்த யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – சூன்ய திதி*

_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_

_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._

_*மேஷ ராசி* க்கு ஜூன் 15 ந்தேதி அதிகாலை 05:19 மணி முதல் ஜூன் 17 ந்தேதி காலை 11:48 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 05:55am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:31pm*_

_*ராகு காலம் – 09:00am to 10:30am*_

_*யமகண்டம் – 01:30pm to 03:00pm*_

_*குளிகன் – 06:00am to 07:30am*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:07am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் -*_
_*ஷடஸீதி புண்யகாலம்*_

_*மிதுன ரவி – 37.33 ( 08:43pm )*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம் : உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடன் பிரச்சனை தீரும். பணரவு திருப்திகரமாக இருக்கும்.  அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார் கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

கன்னி: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக  குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கி மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோ ரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்
கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

கும்பம்

கும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!