இன்றைய ராசிபலன்கள் (17.12.2018)

மேஷம் :

வேலைத் தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : சாதகமான நாள்.
பரணி : முயற்சிகள் கைக்கொடுக்கும்.
கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.

ரிஷபம் :

பிள்ளைகளின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

கிருத்திகை : தேவைகள் நிறைவேறும்.
ரோகிணி : இன்னல்கள் நீங்கும்.
மிருகசீரிடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

மிதுனம் :

தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சந்தேக உணர்வினால் மனக்கசப்புகள் ஏற்படலாம். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் : உயர்வான நாள்.

கடகம் :

வியாபாரத்தில் நீங்கள் கையாளும் புதிய யுக்திகளால் இலாபம் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பொதுப் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் உயரும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
பூசம் : கீர்த்தி உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் உயரும்.

சிம்மம் :

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். இணையதளம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் பயணங்களில் கவனம் வேண்டும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : அமைதி வேண்டும்.

கன்னி :

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : இன்பமான நாள்.
அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.

துலாம் :

தந்தை வழி உறவினர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். செய்யும் செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பிறருக்கு உதவும்போது சிந்தித்துச் செயல்படவும். மனச்சோர்வு உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் உங்களின் மரியாதைக் கூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : கனிவு வேண்டும்.
சுவாதி : செயலில் கவனம் தேவை.
விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.

விருச்சகம் :

இணையதளம் சம்பந்தமான பணிகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளில் காலதாமதம் உண்டாகும். கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் கிடைக்கும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : பொறுமை வேண்டும்.
அனுஷம் : காலதாமதம் நேரிடலாம்.
கேட்டை : தனவரவுகள் கிடைக்கும்.

தனுசு :

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எண்ணங்கள் தெளிவாகும். புதிய நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : புதிய நட்பு கிடைக்கும்.

மகரம் :

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

கும்பம் :

தொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தைரியத்துடன் எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.
சதயம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
பூரட்டாதி : எதிர்ப்புகளை களைவீர்கள்.

மீனம் :

தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்க பணியில் எதிர்பார்த்த ஆதரவான சூழல் உண்டாகும். வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : இடையூறுகள் அகலும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!