இன்றைய ராசிபலன் 17.04.2019 புதன்கிழமை சித்திரை (4) | Today rasi palan
மேஷம்
மேஷம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர்யோகம் கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். பழைய கடனைத்தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
கடகம்
கடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
சிம்மம்
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்
தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்கவேண்டி வரும். சிக்கனம் தேவைப்படும் நாள்.
துலாம்
துலாம்: மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் விவாதம் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
தனுசு
தனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனதிற்கு இதமானசெய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
மகரம்
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கி
கள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.
கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய நாள்.
மீனம்
மீனம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்
கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்…

➖➖➖➖➖➖➖➖➖➖
🍹இன்றைய பஞ்சாங்கம்
➖➖➖➖➖➖➖➖➖➖

சித்திரை 4
{17-4-2019} புதன்கிழமை

வருஷம் ~விகாரி

அயனம் ~உத்தராயணம்

ருது ~வஸந்த ருது

மாதம் ~சித்திரை (மேஷ மாஸம்)

பக்ஷம் ~சுக்ல பக்ஷம்

ஸூர்ய உதயம் ~06:07 am
அஸ்தமனம் ~06:23 pm

*நல்ல நேரம்*~
➖➖➖➖➖
காலை 09.30 am ~ 10.30 am &
மாலை 04.30 pm ~ 05.30 pm .

*ராகு காலம்*~
➖➖➖➖➖
பிற்பகல் 12.00 pm ~ 01.30 pm .

*எமகண்டம்*~
➖➖➖➖➖
காலை 07.30 ~ 09.00 am.

*குளிகை* ~
➖➖➖➖
10.30 am ~ 12.00 noon .

சுப ஹோரைகள்.
➖➖➖➖

காலை 9.00 To 10.00 AM
மதியம் 1.30 To 3.00 PM
மாலை 4.00 To 5.00 pm
இரவு 7.00 To 10.00 PM &
11.00 To 12.00 pm

திதி ~
➖➖
த்ரயோதஶி 9:13 pm வரை பின் சதுர்தஶி

நக்ஷத்திரம் ~
➖➖➖➖
உத்ரம் (உத்தர ஃபல்குனீ) 10:28 pm வரை பின் ஹஸ்தம் (ஹஸ்தா)

யோகம் ~
➖➖➖
த்ருவம் 05:14 pm வரை பின் வ்யாகாதம்

கரணம் ~
➖➖➖
கௌலவம் 10:19 am வரை பின் தைதிலை

ஶ்ரார்த்த திதி ~ மேஷ ஶுக்ல த்ரயோதஶி

அம்ருதாதி யோகம் ~ ஸித்தம் & அம்ருதம்

வார ஶூலை ~வடக்கு

பரிஹாரம் ~பால்

சந்த்ராஷ்டமம் ~ கும்பம்

இன்று ~
👇🏾
மஹா ப்ரதோஷம்

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!