இன்றைய ராசி பலன் 17/9/2017

 

மேஷம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

ரிஷபம்:
மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:
உற்சாகமாகக் காணப்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பணலாபமும் கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பதை மட்டும் இந்த வாரம் தவிர்க்கவும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். செலவுகள் சற்று அதிகரிப்பதால் சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும்.

கடகம்:
இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆனாலும், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவால் திடீர் யோகம் உண்டாகும்.

சிம்மம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கன்னி:
முயற்சிகள் சாதகமாக முடியும்.குடும்ப விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாலையில் நீண்டநாளாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

துலாம்:
இன்று நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.வியாபாரம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:
இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

தனுசு:
உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணலாபம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நீண்டகாலமாகச் சந்திக்காமல் இருந்த பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:
மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:
இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:
இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

Comments

comments

Leave a Comment