இன்றைய ராசிபலன்கள் (18.12.2018)

இன்றைய ராசிபலன் 18/12/2018 மார்கழி ( 3 ) செவ்வாய்க்கிழமை

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டமிட்டவை தாமதமாகும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுக் கப்பாருங் கள். உத்யோகத்தில் சக ஊழியர்
களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். விசேஷங்களை முன்னின்றுநடத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

கடகம்

கடகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்து காட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். கேட்ட
இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைப்படும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடங் குவதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக் காதீர்கள். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்பாருங்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத் திற்கு ஆதரவுப் பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: புதிய முயற்சிகள்யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்

மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்…

Leave a Comment