இன்றைய ராசிபலன் 19/12/2018 மார்கழி ( 4 ) புதன்கிழமை | today rasi palan

*பஞ்சாங்கம்*
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 04*
*டிசம்பர் – 19 – ( 2018 )*
*புதன்கிழமை*
*விளம்பி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*ஸுக்ல*
*த்வாதசி ( 54.51 )*
*ஸௌம்ய*
*பரணி ( 50.27 )*
*ஸிவ யோகம்*
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – த்வாதசி*

*சந்திராஷ்டமம் – கன்னி ராசி*

_உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை ._

_*கன்னி ராசி* க்கு டிசம்பர் 17 ந்தேதி நடு இரவு 01:20 மணி முதல் டிசம்பர் 20 ந்தேதி காலை 08:06 மணி வரை. பிறகு *துலா ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:30am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:50pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

_*தின விசேஷம் – மத்வ ஏகாதசி*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*நாஸ யோகம் – ஸித்த யோகம்*_

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வுவந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதி
காரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரிய மானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டு வார். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

கடகம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின்மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பதறாமல் பக்குவமாக செயல்படவேண்டிய நாள்.

துலாம்

துலாம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: யதார்த்தமாகப் பேசிக்கவர்வீர்கள். நண்பர்கள்,உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகநாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்

மகரம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப்போகும் காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப்பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக்கூடும். வர வேண்டிய பணம் கைக்குவரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!