இன்றைய ராசிபலன்கள் (02.12.2018)

மேஷம் :

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : இன்பமான நாள்.
பரணி : பாராட்டுகள் கிடைக்கும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம் :

முன்னேற்றம் சார்ந்த புதிய சிந்தனைகள் தோன்றும். வீடு மற்றும் வாகனத்திற்கான பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் திருப்தியான சூழல் அமையும். உத்தியோகத்தில் பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : புதிய சிந்தனைகள் தோன்றும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : திருப்திகரமான நாள்.

மிதுனம் :

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : நினைத்தது நிறைவேறும்.
திருவாதிரை : கலகலப்பான நாள்.
புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

கடகம் :

எதிர்பாராத செய்திகளால் குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ளவேண்டிய சூழல் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பதன் மூலம் திருப்தியான சூழல் அமையும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

புனர்பூசம் : புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூசம் : திருப்திகரமான நாள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் :

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் நட்பால் மனமகிழ்ச்சி உண்டாகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கூட்டாளிகளிடம் அவ்வப்போது மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : சுபிட்சமான நாள்.
பூரம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம் : புரிதல் உண்டாகும்.

கன்னி :

வியாபாரத்தில் வேலையாட்களிடம் உங்களின் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இலாபம் அதிகரிக்கும். எண்ணிய இலக்கை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : புதிய நட்பு கிடைக்கும்.

துலாம் :

எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகஸ்தரர்கள் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் புதுவிதமான சூழல் ஏற்படும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : செயல்களில் கவனம் தேவை.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

விருச்சகம் :

உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல்நிலை மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

விசாகம் : நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.
அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
கேட்டை : ஆதரவான சூழல் அமையும்.

தனுசு :

எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். தொழில் சார்ந்த முடிவுகளில் உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து முடிவெடுக்கவும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. மனதில் அவ்வப்போது ஏதாவது கவலை தோன்றி மறையும். தொழில் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : காரிய தடைகள் நீங்கும்.
பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.

மகரம் :

தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : உதவி கிடைக்கும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

கும்பம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாளாக இருந்த கவலைகள் நீங்கும். செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்கால முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : கவலைகள் நீங்கும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

மீனம் :

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் மீது அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
ரேவதி : அன்பு அதிகரிக்கும்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!