இன்றைய ராசிபலன் 20/12/2018 மார்கழி ( 5 ) வியாழக்கிழமை | today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 05*
*டிசம்பர் – 20 – ( 2018 )*
*வியாழக்கிழமை*
*விளம்பி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*ஸுக்ல*
*த்ரயோதசி ( 52.30 )*
*குரு*
*கார்த்திகை ( 59.45 )*
*ஸித்த யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – த்ரயோதசி*

*சந்திராஷ்டமம் – துலா ராசி*

_சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*துலா ராசி* க்கு டிசம்பர் 20 ந்தேதி காலை 08:06 மணி முதல் டிசம்பர் 22 ந்தேதி மதியம் 12:42 மணி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:30am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:50pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*தின விசேஷம் – ப்ரதோஷம்*_
&
_*க்ருத்திகை விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் தக்த யோகம்*_

 

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனை விக்குள் இருந்த மனக் கசப்புநீங்கும்.கடனாககொடுத்தபணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்தவேலைகள் தடையின்றிமுடியும்.புதியவர்கள் நண்பர்களாவார்கள்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளைவிரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன்மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் அடிக்கடி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: திட்டமிட்ட காரி யங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும்.வெளிவட்டாரத்தில் நிதானம்அவசியம். பழைய கடனைத் தீர்க்க முயற்சிசெய்வீர்கள். வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனு சரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளை களால்மதிப்புக் கூடும் சிலர் உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக் கும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்தஅலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில்அமைதி நிலவும்.தள்ளிப்போனவிஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

துலாம்

துலாம்: காலை 8மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதார ணமாக முடிப்பீர்கள். சகோதரவகையில் ஆதாயம் உண்டு.விலை உயர்ந்த ஆபரணம்வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபா ரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக
ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவாலில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்புலாபம் உண்டு. உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்…

 

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!