இன்றைய ராசி பலன் 21.01.2019 திங்கள்கிழமை | Today rasi palan

மேஷம்

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புது வேலை அமையும். வர வேண்டிய பணத்தைபோராடி வசூலிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும் நாள்.

 

ரிஷபம்

ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால்அனுகூலம் உண்டு. வியாபா ரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.தைரியம் கூடும் நாள்.

 

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு, முன்று நாட்களாக உங்க ளுக்குள் இருந்து வந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும்ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நம்பிக் கைக்குரி யவர்கள் சிலர் உதவுவார்கள். வியாபா ரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

 

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

 

சிம்மம்

சிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந் தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுச ரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

 

கன்னி

கன்னி: கொடுத்த வாக்கு றுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபா ரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றிகாண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

 

துலாம்

துலாம்: ஆன்மிகப் பெரி யோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.பிரபலங்களின் நட்பு கிட்டும்.உங்களால் பயனடைந் தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய் வார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

 

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதிய வரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நலம் சீராகும். தடைப் பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். உற்சாகமான நாள்.

 

 

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடங் குவதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியும். நெருங் கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

 

மகரம்

மகரம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதக மாக முடியும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதுசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

 

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல் வாக்குக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

 

மீனம்

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரார்த்தனைகளைகுடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!