இன்றைய ராசிபலன் 21/4/2018 சித்திரை 9 சனிக்கிழமை | Today rasi palan 21/4/2018

மேஷம் :

சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். முயற்சிக்கேற்ற வெற்றி கிடைக்கும். புது வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு அனுகூலமான நாள். துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

அசுவினி : மனமகிழ்ச்சி ஏற்படும்.
பரணி : வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

ரிஷபம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் சிறப்படையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : விவாதங்களால் மேன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் : நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம் :

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய நட்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவாதிரை : சுபமான நாள்.
புனர்பூசம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம் :

வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் அமையும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : வாய்ப்புகள் அமையும்.
ஆயில்யம் : பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

சிம்மம் :

நண்பர்களுடன் சேர்ந்து பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பொதுக்கூட்ட பேச்சுகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
பூரம் : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

கன்னி :

சுயதொழிலில் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகளை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

உத்திரம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அஸ்தம் : சுபச் செய்திகள் உண்டாகும்.
சித்திரை : உங்களின் கனவுகளை நடைமுறைப்படுத்துவீர்கள்.

துலாம் :

தாயின் உடல்நிலையில் கவனம் வேண்டும். அரசு அதிகாரிகளினால் சாதகமான சூழல் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த வங்கிக்கடன்கள் கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : கவனம் தேவை.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : புதிய சூழல் உண்டாகும்.

விருச்சகம் :

புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு

விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அனுஷம் : புகழப்படுவீர்கள்.
கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.

தனுசு :

கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். மனதில் தோன்றும் புதுவித எண்ணங்களால் மனசஞ்சலம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். ஞான போதனை கிடைக்கும். பொருட்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : மனசஞ்சலம் உண்டாகும்.
பூராடம் : ஞான போதனை கிடைக்கும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.

மகரம் :

கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : மனம் மகிழ்வீர்கள்.

கும்பம் :

பிள்ளைகளால் சுபச் செலவுகள் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மனக் குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : சுபச் செலவுகள் உண்டாகும்.
சதயம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூரட்டாதி : மந்தத்தன்மை உண்டாகும்.

மீனம் :

புத்திரர்களால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துகளால் பொருட்சேர்க்கை உண்டாகும். தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை செய்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள். மூலிகைகளால் இலாபம் அதிகரிக்கும். தொழிலில் உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : புத்திக்கூர்மை வெளிப்படும்.

Leave a Comment