இன்றைய ராசி பலன் 22. 01.2019 செய்வாய்கிழமை தை (8) | Today rasi palan and panchangam

பஞ்சாங்கம்
°°°°°°°°°°°°°°°°°
தை – 08
ஜனவரி – 22 – ( 2019 )
செவ்வாய்கிழமை
விளம்பி
உத்தராயணே
ஹேமந்த

மகர
க்ருஷ்ண
ப்ரதமை ( 7.6 ) ( 09:30am )
&
த்விதீயை
பௌம
ஆயில்யம் ( 50.47 )
ப்ரீதி யோகம் ( 5.12 ) ( 8:42am )
&
ஆயுஷ்மான் யோகம்
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – த்விதீயை

சந்திராஷ்டமம் – தனுசு ராசி

மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .

தனுசு ராசி க்கு ஜனவரி 20 ந்தேதி இரவு 11:54 மணி முதல் ஜனவரி 22 ந்தேதி நடு இரவு 02:18 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:42am

சூர்ய அஸ்தமனம் – 06:06pm

ராகு காலம் – 03:00pm to 04:30pm

யமகண்டம் – 09:00am to 10:30am

குளிகன் – 12:00noon to 01:30pm

இன்றைய அமிர்தாதி யோகம் –
இன்று முழுவதும் அமிர்த யோகம்

மேஷம்

மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.

 

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

 

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கு வீர்கள். புதிய யோசனைகள் பிறக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

 

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவு களில் மூழ்குவீர்கள். பிள்ளை களின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

 

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்
கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

 

கன்னி

கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப் பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர் பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.

 

துலாம்

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

 

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக் கும். உறவினர்கள் மதிப்பார் கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்அதிகாரிகளுடன் இணக்கமானசூழ்நிலை உருவாகும். நிம்மதியான நாள்.

 

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்க ளின் தனித்ததன்மையையே பின்பற்றுவது நல்லது. திட்டமிடாத செலவுகளை போராடிசமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். போராட்டமான நாள்.

 

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்..

 

கும்பம்

கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

 

மீனம்

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்றுமுடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!