இன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை | Today rasi palan 23/4/2018

மேஷம் :

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டாகும். உயர்கல்வியில் செய்யும் புதுவித ஆராய்ச்சிகளால் புகழப்படுவீர்கள். நண்பர்களால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனை தரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : நன்மை உண்டாகும்.
கிருத்திகை : எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

ரிஷபம் :

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொன் போன்ற விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
ரோகிணி : பணிச்சுமை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

மிதுனம் :

கடல் வழி பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமை புலப்படும். உத்தியோகஸ்தரர்கள் பணியில் மேன்மை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.

கடகம் :

வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். போட்டிகளில் பங்குபெற்று இலாபம் அடைவீர்கள். கடன்காரர்களால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : புதிய முயற்சிகளை செய்வீர்கள்.
பூசம் : பயணங்களில் கவனம் தேவை.
ஆயில்யம் : மன வருத்தம் குறையும்.

சிம்மம் :

செய்யும் தொழிலில் புதுவித மாற்றங்களை செயல்படுத்துவதால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உறவினர்களுக்கு இடையே உறவு நிலை மேம்படும். கூட்டாளிகளால் தனலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.

கன்னி :

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். வாகனங்களால் இலாபம் உண்டாகும். இளைய சகோதரர்களை அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : சாதகமான முடிவு கிடைக்கும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

துலாம் :

தாயின் ஆதரவு கிடைக்கும். அரசு பணிக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். உங்களின் இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : காரிய சித்தி உண்டாகும்.
விசாகம் : ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

விருச்சகம் :

தைரியத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாரிசுகளால் பெருமையடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது சுபிட்சத்தை உண்டாக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து கௌரவ பதவிகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : தைரியம் பிறக்கும்.
அனுஷம் : சுபிட்சம் உண்டாகும்.
கேட்டை : உயர் பதவி கிடைக்கும்.

தனுசு :

புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : நற்பலன் உண்டாகும்.
பூராடம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திராடம் : கவனம் தேவை.

மகரம் :

சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிறருக்கு உதவும்போது கவனமாக இருத்தல் வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அயல்நாட்டு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : உறவு நிலை மேம்படும்.
அவிட்டம் : சாதகமான சூழல் உண்டாகும்.

கும்பம் :

மூத்த சகோதரர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள். பொதுக் கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : மனக்கசப்புகள் குறையும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : கவனமாக பேசவும்.

மீனம் :

புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர்களினால் சுப விரயம் உண்டாகும். அறச்செயலுக்காக நன்கொடைகளை கொடுத்து மகிழ்வீர்கள். பலனை எதிர்பார்க்காமல் செய்த செயல்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

Comments

comments

Leave a Comment