இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.07.2019 செவ்வாய்க்கிழமை ஆடி 7 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆடி – 07*
*ஜூலை – 23 – ( 2019 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*க்ரீஷ்ம*
*கர்கடக*
*க்ருஷ்ண*
*ஷஷ்டி ( 20.0 ) ( 02.03pm )*
&
*ஸப்தமி*
*பௌம*
*உத்திரட்டாதி ( 14.27 ) ( 11:33am )*
&
*ரேவதி*
*அதிகண்ட யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – ஸப்தமி*

_*சந்திராஷ்டமம் – ஸிம்ம ராசி*_

_மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை ._

_*சிம்ம ராசி* க்கு ஜூலை 21 ந்தேதி நடு இரவு 02:51 மணி முதல் ஜூலை 24 ந்தேதி மதியம் 1:45 வரை. பிறகு *கன்னி ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:03am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:39pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:51am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – கரிநாள்*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_

இன்றைய ராசிபலன்
7/23/2019
இன்றைய ராசிபலன்
மேஷம்

மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவுபணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கன்னி

கன்னி: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

துலாம்: சமயோஜிதமாகப் பேசி சாதிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைசொல்லித் தருவார். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள்.புதுமை படைக்கும் நாள்.

தனுசு

தனுசு: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்புவட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப் பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டா கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச்செல்லும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

🙏🙏🙏🙏🙏🙏
சிவ.ஜெயந்தி

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!