இன்றைய ராசிபலன் 24.06.2019 திங்கட்கிழமை ஆனி 9 | Today rasi palan

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.*

*பஞ்சாங்கம் ~ *ஆனி* ~ *09*
*{24.06.2019} திங்கட்கிழமை*.
*வருடம்*~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ உத்தராயணம்.
*ருது*~ க்ரீஷ்ம ருதௌ.
*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)
*பக்ஷம்*~ கிருஷ்ண பக்ஷம்.
*திதி*~ ஸப்தமி .
*ஸ்ரார்த்த திதி ~ ஸப்தமி .*
*நாள்* ~~ திங்கட்கிழமை {இந்து வாஸரம் } ~~~~~~~ *நக்ஷத்திரம் ~ பூரட்டாதி*
*யோகம்* ~ சரி இல்லை..
*கரணம் ~ பத்ரம், பவம்*
*நல்ல நேரம்*~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30 ~ 05.30 PM.
*ராகு காலம்*~ காலை 07.30 AM ~ 09.00.AM.
*எமகண்டம்*~ காலை 10.30 ~12.00 PM.
*குளிகை*~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.
*சூரிய உதயம்*~ காலை 05.54 AM.
*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.34 PM.
*சந்திராஷ்டமம்*~ பூரம் .
*சூலம்*~ கிழக்கு.
*பரிகாரம்*~ தயிர் .
*இன்று — *. 🙏🙏
*🔯🕉SRI RAMAJEYAM🕉🔯*

*PANCHCHAANGAM*~
*AANI ~ 09 ~ (24.06.2019) MONDAY*
*YEAR*~ VIKAARI VARUDAM { VIKAARI NAMA SAMVATHSARAM}
*AYANAM* ~ UTHTHARAAYANAM .
*RUTHU*~ GREESHMA RUTHU .
*MONTH*~ AANI { MITHUNA MAASAM}
*PAKSHAM* ~ KRISHNA PAKSHAM.
*THITHI*~ *SABTHAMI.*
*SRAARTHTHA THITHI ~ SABTHAMI.*
*DAY*~MONDAY ( INDHU VAASARAM)
*NAKSHATHRAM ~ POORATTAADHI.*
*YOGAM* ~ NOT GOOD.
*KARANAM~ BHADHRAM ,BHAVAM.*
*RAGU KALAM*.~:07.30 ~09.00 AM.
*YEMAGANDAM* ~ 10.30 ~12.00 PM.
*KULIGAI* :~ 01.30 ~ 03.00 ~ PM .
*GOOD TIME*~ 09.30 AM TO 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM .
*SUN RISE* ~ 05.54 AM.
*SUN SET~ 06.34 PM*
*CHANTHRASHTAMAM ~ POORAM*.
*SOOLAM* ~ EAST.
*Parigaram*~*CURD* .
*TODAY ~ *
🙏🙏🙏🙏

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
24-06-2019
திங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மேஷம் ♈

வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் – அது வேலையில் கவனத்தை பாதிக்கும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்! கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் துணையுடனான இன்ப உரையாடல் மூலம் நீங்கள் ஒருவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என இன்று தெரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

ரிஷபம் ♉
நல்ல ஆரோக்கியம் இருந்தால் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள்தான் மையமானவராக இருப்பீர்கள். ரொமான்சுக்கு நல்ல நாள் நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.
அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மிதுனம் ♊
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலா உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கடகம் ♋
உங்கள் விருப்பத்தின்படி குழந்தைகள் நடக்க மாட்டார்கள் – அது உங்களை ஆத்திரம் அடையச் செய்யலாம். கட்டுப்படுத்தாக கோபம் வழக்கமாக எல்லோரையும் காயப்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்த்திடுங்கள். கோபம் அடைபவரையும் அது பாதிக்கும். ஏனெனில் அது சக்தியை வீணடித்து நியாயத்தைக் கண்டுபிடிக்கும் தன்மையைக் குறைக்கும். அது பிரச்சினையை பெரிதாக்கத்தான் உதவும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். பார்ட்னர்ஷிப்பில் புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். எல்லாமே பலன் தந்துவிடாது. ஆனால் பார்ட்னர்களுடன் கைகோர்ப்பதற்கு முன்பு சிந்திக்கவும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

சிம்மம் ♌
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். உங்கள் காதலர் அளவுக்கு மீறி புகழக் கூடும் – இந்த உலகில் என்னை தனியாக விட்டுவிடாதே என்று – கவனமாக இருங்கள். எந்த பிசினஸ் / சட்ட ஆவணங்களையும் நன்றாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். னீங்கள் திருமண பந்த்துத்துக்குள் நுழயும் முன் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அனைத்தும் நிஜமாக கூடும். உங்கள் துணை உங்கள் உயிரில் கலந்தவர்.
அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கன்னி ♍
மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். தலையிடுவதை முடிந்தவரை குறைத்துக் கொளுங்கள். இல்லாவிட்டால் அது சார்புத்தன்மையை உருவாக்கும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். எதிர்பாராத நல்ல செய்தி உங்கள் உற்சாகத்தை ஊக்கப்படுத்தும். உங்கள் குடும்பத்தினரிடம் அதைப் பகிர்ந்து கொள்வது அவர்களுக்குப் புத்துணர்வு தரும். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்கள் அண்டை வீட்டாரின் சொற்படி உங்கள் துணை இன்று வாக்குவாதத்தில் ஏடுபட கூடும்.
அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

துலாம் ♎
கிரியேட்டிவான ஹாபிகள் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். காதலுக்கு உரியவர்களுடன் உறவை பாதிக்கும் ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதில் நீங்கள் சிறந்தவர்கள். காதலின் வலியை உணர்வீர்கள். உங்களின் நம்பிக்கை, தொழில் வாழ்வில் நல்ல பலனை ஏற்படுத்தும். உங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஏற்கும்படி செய்ய அந்த நம்பிக்கை உதவும். அதனால் அவர்களின் உதவி கிடைக்கும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணையுடன் ஆலோசிக்காமல் ஏதெனும் நீங்கள் திட்டமிட்டிருந்தால் அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

விருச்சிகம் ♏
உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். அதுதான் குணமாக்குதலுக்கு சிறந்த வழி. எல்லையில்லா மகிழ்ச்சியின் ஆதாரமாக அவர்கள் இருப்பார்கள். சிலருக்கு நிச்சயமாக புதிய ரொமான்ஸ் கிடைக்கும் – உங்கள் வாழ்வில் காதல் பூக்கும். கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

தனுசு ♐
அதிக கொலஸ்டிரால் உணவைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. சரியான நேரத்தில் செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்வைக் காப்பாற்றுவீர்கள். அந்தச் செய்தி உங்கள் குடும்பத்தினரை பெருமை அடையச் செய்து உற்சாகம் கொடுக்கும். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். இன்று வாழ்க்கையே இனிமையாக உங்களுக்கு தோன்றும் ஏன் என்றால் உங்கள் துணை உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ப்ளான் வைத்துள்ளார்.
அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மகரம் ♑
சுற்றியுள்ளவர்கள் அதிகம் எதிர்பார்ப்பதை உணர்வீர்கள் – உங்களால் இயலக் கூடியதற்கு அதிகமாக வாக்குறுதி தராதீர்கள் – மற்றவர்களை மகிழ்விப்பதற்காக நீங்கள் அதிகம் உழைக்காதீர்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தியுடன் இந்த நாள் தொடங்கும். தன் வாழ்வைவிட ுங்களை அதிகம் நேசிக்கும் நபரை சந்திப்பீர்கள். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்,
அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கும்பம் ♒
ஓய்வெடுத்துக் கொண்டு, வேலைக்கு இடையே முடிந்தவரை ரிலாக்ஸ் பண்ண முயற்சி செய்யுங்கள். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். உங்கள் வேலையில் திறமையை அதிகரிக்க புதிய டெக்னிக்குகள் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள், உங்களுடைய ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மீனம் ♓
நீங்களாக மருந்து சாப்பிடுவது, அதை சார்ந்திருப்பதாக ஆகிவிடும். எந்த மருந்து சாப்பிடும்போதும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும் – இல்லாவிட்டால் மருந்தை சார்ந்திருக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடும். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். தினசரி வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு நண்பர்களுடன் இன்று வெளியில் செல்லுங்கள். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமையான மாலை பொழுதை செலவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
💚💚💚💚💚💚💚💚💚💚💚

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!